வாலாஜாபேட்டையை அடுத்த குடிமல்லூரில் இயங்கி வரும் மணல் குவாரியை அகற்றக் கோரி, கிராம மக்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தக் குவாரியில் அதிக அளவில் மணல் அள்ளப்படுவதால் குடிமல்லூர், வன்னிவேடு, கன்னிகாபுரம், தேவதானம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு வழங்கப்படும் கூட்டுக் குடிநீர்த் திட்ட விநியோகம் பாதிக்கப்படுகிறது.
நாள்தோறும் 100-க்கும் மேற்பட்ட லாரிகளில் அள்ளப்படும் மணல் சேமிப்பு கிடங்குக்கு குடிமல்லூர் கிராமம் வழியாக அதிகாலையிலே செல்வதால் பல்வேறு வகையான இடையூறுகள் ஏற்படுவதாகவும், விபத்துகள் நிகழ்வதாகவும் கிராம மக்கள் புகார் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், 100-க்கும் மேற்பட்டவர்கள் திங்கள்கிழமை மணல் குவாரியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த வாலாஜா காவல் நிலைய ஆய்வாளர் விஜிகுமார் தலைமையிலான போலீஸார் அங்கு சென்று, சமரசம் செய்தார். இதையடுத்து, கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

