மருது சகோதரர்களுக்கு வீரவணக்கம்: முதல்வர் விஜய்சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 உயர்வு!கனமழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!கனமழை: நீலகிரியில் 6 தாலுகாக்களில் இன்று (அக். 24) பள்ளிகளுக்கு விடுமுறை!தமிழகத்தில் இரு நாள்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை! அக். 26-இல் புயல் உருவாக வாய்ப்பு!கடன் பத்திரங்கள் மூலம் ரூ. 9,000 கோடி திரட்டுகிறது தமிழக அரசு!அருணாசல் எல்லையில் ரோந்துப் பாதைகளை சீன படைகள் பின்பற்றாததால் பதற்றம்: இந்தியாபாகிஸ்தானில் இந்திய ஆதரவு பயங்கரவாதத்தை ஒழிப்போம்! ராணுவ தலைமைத் தளபதி முனீா்!ரூ. 84,084 கோடிக்கு ‘சமுத்ர மந்தன்’ திட்டம்: கடலுக்கு அடியில் எண்ணெய், எரிவாயு தேட வழிகாட்டுதல்கள் வெளியீடு

பக்தர்களுக்கு அன்னதானம் அளிப்பு

ஆம்பூர் கோயில்களில் புரட்டாசி சனிக்கிழமை விழாக்கள் நடைபெற்றன. இதையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

Updated On :

ஆம்பூர் கோயில்களில் புரட்டாசி சனிக்கிழமை விழாக்கள் நடைபெற்றன. இதையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

 பெரிய ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜைகள்,  மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதையொட்டி, மூலவருக்கு வெண்ணை சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானத்தை வருவாய்க் கோட்ட அலுவலர் ரெங்கராஜன் தொடக்கி வைத்தார்.

 திருப்பணிக் குழு முன்னாள் தலைவர் கிஷண்லால், கோதண்டராம சுவாமி கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் ஸ்ரீதர், அனுமன் பக்த சபை நிர்வாகிகள் தினேஷ், குருமூர்த்தி, ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் முன்னாள் அறங்காவலர் சீனிவாசன், அர்ச்சகர்கள் சர்மா, ரமணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 இதேபோல், சீதா, லட்சுமணன் சமேத கோதண்ட ராமர் கோயில், ஸ்ரீனிவாச பெருமாள் கோயில், ரெட்டித்தோப்பு பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில், ஆனைமடுகு ஆஞ்சநேயர் கோயில், துத்திப்பட்டு ஸ்ரீ பிந்துமாதவர் பெருமாள் கோயில், விண்ணமங்கலம் அமர்ந்த வரதராஜ பெருமாள் கோயில் உள்ளிட்டவற்றிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

வாணியம்பாடியில்...

புரட்டாசி சனிக்கிழமையையொட்டி, வாணியம்பாடி பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

 வாணியம்பாடியை அடுத்த திம்மாம்பேட்டையில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் அன்னதானத்தை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஸ்ரீராமுலு வழங்கினார்.

 பெரியப்பேட்டையில் உள்ள அழகு பெருமாள் கோயில், உதயேந்திரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோயில் ஆகியவற்றிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.