
மாதனூர் ஒன்றியத்தில் ரூ.25 லட்சத்தில் நடைபெற்றுவரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் இரா.நந்தகோபால் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.
அகரம்சேரி ஊராட்சியில் ரூ.13 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட ஊராட்சி சேவை மையக் கட்டடம், அரசு உயர்நிலைப் பள்ளியில் ரூ.10 லட்சத்தில் கட்டப்பட்டுவரும் வகுப்பறைக் கட்டடம், பாலூர் ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பணி, குப்பம்பட்டு ஊராட்சியில் கட்டப்படும் தனிநபர் கழிப்பறை ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் நந்தகோபால் பார்வையிட்டார். பின்னர் பாலூர், வடபுதுப்பட்டு ஊராட்சிகளில் மரக்கன்றுகளை அவர் நட்டார்.
ஆய்வின்போது திட்ட இயக்குநர் மனோகர் சிங், கல்விக் குழுவின் ஒன்றியத் தலைவர் ஜோதிராமலிங்க ராஜா, அகரம்சேரி கூட்டுறவு சங்கத் தலைவர் ஆர்.வெங்கடேசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி, மரியம் ரெஜினா, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் அன்பரசன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ஜெய்சங்கர், ரமேஷ், இனியகுமார், ஊராட்சி மன்றத் தலைவர்கள் பன்னீர், பாண்டு, குமார், எஸ்.எஸ்.சங்கர் உள்ளிட்டோர் உடனிந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






