* தொகுதி பெயர் : குடியாத்தம் (தனி)
* தொகுதி வரிசை எண் : 46
* சிறப்புகள்
1952 முதல் 2 உறுப்பினர்களைக் கொண்ட தொகுதியாக இருந்த இத்தொகுதி, 1962-இல் ஓர் உறுப்பினர் தொகுதியாக மாறியது. பொதுத் தொகுதியாக இருந்த வந்த குடியாத்தம் கடந்த 2011-ஆம் ஆண்டு தேர்தலில் தனித் தொகுதியாக மாற்றம் செய்யப்பட்டது.
இந்தியா சுதந்திரம் பெற்றதும், தில்லி செங்கோட்டையில் ஏற்றிய முதல் தேசியக் கொடி தயாரிக்கப்பட்டது குடியாத்தம் நகரில் தான். 1954-இல் காமராஜர் குடியாத்தம் தொகுதி இடைத் தேர்தலில் வெற்றிபெற்று தமிழக முதல்வரானார்.
இத்தொகுதி மக்களின் பிரதானத் தொழில் விவசாயம். சிவகாசிக்கு அடுத்தபடியாக தீப்பெட்டித் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளதால் குட்டி சிவகாசி என்று அழைக்கப்படுகிறது.
வேலூர் மாவட்டத்திலேயே பெரிய அணையான மோர்தானா அணை இங்குள்ளது. பேர்ணாம்பட்டில் அன்னியச் செலாவணியை ஈட்டித் தரும் தோல் தொழிற்சாலைகள் உள்ளன. குடியாத்தம் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் கைத்தறி லுங்கிகள் உலகம் முழுவதும் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. பீடித் தொழிலும் இங்கு பிரசித்தி பெற்றது.
* தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
குடியாத்தம் நகராட்சி : 36 வார்டுகள்
குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் : 12 ஊராட்சிகள்
பேர்ணாம்பட்டு நகராட்சி : 21 வார்டுகள்
பேர்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம் : 35 ஊராட்சிகள்
குடியாத்தம் ஒன்றியம்: அக்ராவரம், சின்னதோட்டாளம், எர்த்தாங்கல், கருணீகசமுத்திரம், கீழ்பட்டி, குளிதிகை, மூங்கப்பட்டு, பெரும்பாடி, சீவூர், சேம்பள்ளி, உள்ளி, வளத்தூர் ஆகிய ஊராட்சிகள்.
பேர்ணாம்பட்டு ஒன்றியம்: அரவட்லா, அழிஞ்சிகுப்பம், பாலூர், பத்தரபல்லி, செண்டத்தூர், சின்னதாமல்செருவு, சொக்கரிஷிகுப்பம், ஏரிகுத்தி, எருக்கம்பட்டு, குண்டலப்பள்ளி, கார்க்கூர், கொத்தப்பல்லி, கொத்தூர், மாச்சம்பட்டு, மேல்பட்டி, மசிகம், எம்.வி. குப்பம், மொரசபல்லி, மோர்தானா, பல்லலகுப்பம், பரவக்கல், பொகளூர், ராஜக்கல், சாத்கர், டி.டி. மோட்டூர், அயித்தம்பட்டு, சின்னவரிகம், தேவலாபுரம், கைலாசகிரி, பெரியகொம்மேஸ்வரம், நரியம்பட்டு, பெரியவரிகம், சாத்தம்பாக்கம், துத்திப்பட்டு ஆகிய ஊராட்சிகள்.
* வாக்காளர்கள்
ஆண்கள் : 1,28, 632
பெண்கள் : 1,31, 980
மொத்தம் : 2,60,612
* வாக்குச் சாவடிகள் : 289
* இதுவரை எம்எல்ஏ க்கள்....
இரட்டைத் தொகுதியாக இருந்தபோது
1952- ஏ.ஜே.அருணாசல முதலியார், (காங்கிரஸ்)
ஏ.எம்.ரத்தினசாமி (காங்கிரஸ்)
1954- காமராஜர் ( இடைத் தேர்தல்) (காங்கிரஸ்)
டி.மணவாளன் (காங்கிரஸ்)
1957- வி.கே.கோதண்டராமன் (மார்க்சிஸ்டு)
டி.மணவாளன் (காங்கிரஸ்)
1962- டி.மணவாளன் (காங்கிரஸ்)
1967- வி.கே.கோதண்டராமன் (மார்க்சிஸ்ட்)
1971- எ.க.துரைசாமி (திமுக)
1977- வி.கே.கோதண்டராமன் (மார்க்சிஸ்ட்)
1980- கே.ஆர்.சுந்தரம் (மார்க்சிஸ்ட்)
1984- ஆர்.கோவிந்தசாமி (காங்கிரஸ்)
1989- கே.ஆர். சுந்தரம் (மார்க்சிஸ்ட்)
1991- வி.தண்டாயுதபாணி (காங்கிரஸ்)
1996- வி.ஜி.தனபால் (திமுக)
2001- சி.எம்.சூரியகலா (அதிமுக)
2006- ஜி.லதா (மார்க்சிஸ்ட்)
2011- கு.லிங்கமுத்து (இந்திய கம்யூனிஸ்ட்)
* தேர்தல் நடத்தும் அலுவலர்/ தொடர்பு எண்
டி. குமரேசன், தனி துணை ஆட்சியர் (சிறப்புத் திட்டங்கள்)
83441 76080
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பழனியில் 2 அரசுப் பேருந்துகள் ஜப்தி

காா் மோதி தொழிலாளி உயிரிழப்பு

மாணவியை கத்தியால் வெட்டியவா்களை கைது செய்ய வலியுறுத்தி மீஞ்சூா் காவல் நிலையம் முற்றுகை
சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவா் கைது
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

