ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்!ஜம்மு காஷ்மீரில் அறிமுக பன்னாட்டு திரைப்பட விழா..! ஏற்பாடுகளை ஆய்வு செய்த ஓமர் அப்துல்லா!ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் டிரம்ப்!குஜராத்தில் மாணவிகளுக்கு மாதந்தோறும் இலவச நாப்கின்! மேற்பார்வைக்கு ஆசிரியை நியமனம்!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ. 95.68 ஆக நிறைவு! கரடியின் ஆதிக்கத்தில் பங்குச் சந்தை!: சென்செக்ஸ் 492 புள்ளிகள் சரிவு!!கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை; இது எங்கள் மாநிலத்தின் பிரச்னை: ராமலிங்க ரெட்டி
/

ஆம்பூர் அருகே லாரி மீது கார் மோதல்: 4 பேர் சாவு

ஆம்பூர் அருகே லாரி மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.சென்னை, ஷெனாய் நகரைச் சேர்ந்தவர் குமாரசாமி (66), ஓய்வுபெற்ற அரசு மருத்துவர்.

Updated On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

ஆம்பூர் அருகே லாரி மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

சென்னை, ஷெனாய் நகரைச் சேர்ந்தவர் குமாரசாமி (66), ஓய்வுபெற்ற அரசு மருத்துவர்.

இவர் தன்னுடைய மனைவி லட்சுமி (60), மாமியார் கமலம்மாள் (80) ஆகியோருடன் சேர்ந்து பெங்களூருக்குச் சென்றுவிட்டு சென்னையை நோக்கி காரில் திரும்பிக் கொண்டிருந்தார்.

காரை சென்னையைச் சேர்ந்த கிருஷ்ணன் (30) என்பவர் ஓட்டியுள்ளார். ஆம்பூர் அருகே தோட்டாளம் கிராமத்தின், தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவே இருந்த தடுப்பின் மீது மோதியது.

பின்னர் நெடுஞ்சாலையின் குறுக்கே பாய்ந்த கார், ஆம்பூர் நோக்கிச் சென்ற மினி லாரி மீது மோதியது.

இதில் குமாரசாமி, கிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். லட்சுமி, கமலம்மாள் ஆகியோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தனர்.

ஆம்பூர் கிராமிய போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று குமாரசாமி, கிருஷ்ணன் ஆகியோரின் சடலங்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.