
வாலாஜாபேட்டையில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தொழுநோயாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமை மாவட்ட துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) கே.எஸ்.சுரேஷ் தொடக்கி வைத்தார்.
முகாமில், கரிகிரி மருத்துவமனை மருத்துவர் பார்த்திப ராஜன், வேலூர் மாவட்ட தொழுநோய் மருத்துவ அலுவலக மருத்துவர் பிரவீண் ஆகியோர் நோயாளிகளுக்கு சிகிச்சையளித்தனர். அறுவை சிகிச்சைக்காக 3 பேர் பரிந்துரை செய்யப்பட்டனர். மேலும், மருந்து, மாத்திரைகளும் வழங்கப்பட்டன.
முகாமுக்கான ஏற்பாடுகளை வாலாஜா வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜசேகரன் செய்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





