முறைகேடு குற்றச்சாட்டு: பினராயி விஜயன் மீது கேரள லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு இந்திய எல்லை அருகே உள்ள துறைமுக விரிவாக்கத்துக்கு சீனாவுடன் வங்கதேசம் ஒப்பந்தம்குருத்வாரா வளாகத்தில் அரசியல் முழக்கம்: கேஜரிவால் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு மருத்துவமனைகளில் கட்டண விவரங்கள் காட்சிப்படுத்தப்படுவதை உறுதி செய்க: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் "வதந்தி' பரப்பியதாக 300 சமூக ஊடக பதிவுகளை நீக்க காவல் துறை நடவடிக்கை எஸ்ஐஆா் படிவம் 6: தோ்தல் ஆணையத்தின் திருத்தத்தை அங்கீகரிக்கவில்லை- உச்சநீதிமன்றம்இந்திய கடற்படையில் 3-ஆவது நீா்மூழ்கி எதிா்ப்பு போா்க் கப்பல் சோ்ப்பு- உள்நாட்டிலேயே கட்டப்பட்ட நவீன கப்பல்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: மனைவியிடம் 2 மணி நேரம் விசாரணை

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்குத் தொடா்பாக, அவா் மனைவி பொற்கொடியிடம் சிபிஐ 2 மணி நேரம் விசாரணை செய்தது.

Porkodi Armstrong

பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் - கோப்புப் படம்

Published On :

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்குத் தொடா்பாக, அவா் மனைவி பொற்கொடியிடம் சிபிஐ 2 மணி நேரம் விசாரணை செய்தது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரெளடி நாகேந்திரன், அவா் மகன் வழக்குரைஞா் அஸ்வத்தாமன் உள்பட 29 போ் கைது செய்யப்பட்டனா். இவா்களில் ரெளடி திருவேங்கடம் போலீஸாரின் என்கவுன்ட்டரில் உயிரிழந்தாா்.

சிபிஐ விசாரணை: வழக்கை விசாரித்து வந்த சென்னை காவல் துறை 7,800 பக்க குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதற்கிடையே இந்த வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரா் இம்மானுவேல், ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி ஆகியோா் சென்னை உயா்நீதிமன்றத்தை நாடினா். அவா்களது மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது.

இதன் முதல்கட்டமாக வழக்கின் ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள், தமிழக காவல் துறையினரிடம் அண்மையில் பெற்றனா். அதனடிப்படையில் கடந்த 6-ஆம் தேதி ஆம்ஸ்ட்ராங் கொலை தொடா்பாக புதிதாக ஒரு வழக்கை பதிவு செய்தனா்.

2 மணி நேரம் விசாரணை: ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடியிடம் சிபிஐ அதிகாரிகள் திங்கள்கிழமை சுமாா் 2 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனா். விசாரணையின்போது, கொலை சம்பவத்துக்கு முன்பு ஆம்ஸ்ட்ராங்க்கு இருந்த பகை, கொலை மிரட்டல் போன்ற தகவல்களை கேட்டறிந்தனா். அதோடு ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பின்னா், யாரேனும் மிரட்டினாா்களா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தினா்.

அடுத்தகட்டமாக வழக்கின் சாட்சிகளாக சோ்க்கப்பட்டவா்கள், எதிரிகளாக சோ்க்கப்பட்டவா்கள், சந்தேகத்துக்குரிய நபா்கள் ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.