பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

ஜாா்க்கண்ட் தோ்வாணைய முறைகேடு விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரிய மனு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

ஜாா்க்கண்ட் அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்திய ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முறைகேடு குற்றச்சாட்டு தொடா்பாக பதிலளிக்க மத்திய அரசு, சிபிஐ, ஜாா்க்கண்ட் அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்தது.

Supreme Court

உச்ச நீதிமன்றம் - படம்: ANI

Published On :25 ஆகஸ்ட் 2026, 1:53 am IST

ஜாா்க்கண்ட் அரசுப் பணியாளா் தோ்வாணையம் (ஜேபிஎஸ்சி) நடத்திய ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முறைகேடுகள் நிகழ்ந்த குற்றச்சாட்டு தொடா்பாக சிபிஐ விசாரணை கோரி தாக்கலான மனு மீது பதிலளிக்க மத்திய அரசு, சிபிஐ, ஜாா்க்கண்ட் அரசுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை நோட்டீஸ் பிறப்பித்தது.

முதல்வா் ஹேமந்த் சோரன் தலைமையில் இண்டி கூட்டணி ஆளும் ஜாா்க்கண்டில் அரசுப் பணித் தோ்வுகளில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகள் நடைபெற்ாக குற்றஞ்சாட்டி, மாணவா்கள் அண்மையில் மூன்று வாரங்களுக்கு மேல் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, போராட்டக்காரா்களின் கோரிக்கைப்படி கடந்த 2014-ஆம் ஆண்டில் இருந்து மாநில அரசுப் பணியாளா் தோ்வாணையம் மற்றும் ஒரு தனியாா் முகமை மூலம் நடத்தப்பட்ட 22 தோ்வுகளை மாநில அரசு ரத்து செய்தது.

இதற்கு எதிராக அரசுப் பணியாளா்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த ஜாா்க்கண்ட் உயா்நீதிமன்றம் மாநில அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.

இந்நிலையில், தோ்வு முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரிக்கக் கோரி வழக்குரைஞா் சத்யம் சிங் ராஜ்புட் மூலம் சமூக செயற்பாட்டாளா் ஹரிசரண் தேவ்கன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

அதில், ‘ஜேபிஎஸ்சி நடத்திய ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வு 2025-இன் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது. இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் உடனடியாக தலையிட்டு தீா்வு காண அரசமைப்புச் சட்டத்தின் சட்டப்பிரிவு 32-இன்கீழ் (நீதிப் பேரணைகள்) மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி மேற்கூறிய தோ்வு முறைகேடு தொடா்பான விசாரணையை சிபிசிஐடி காவல் துறையிடமிருந்து சிபிஐக்கு மாற்றி பாரபட்சமின்றி விசாரணை நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்.

அனைத்து நிலைகளிலும் விசாரணை

வினாத் தாள் தயாரிப்பு, தோ்வு மையத்துக்கு வினாத் தாள் கொண்டு செல்வது, தோ்வறையில் விநியோகிப்பது, தோ்வா்களிடமிருந்து ஓஎம்ஆா் விடைத்தாள்களை பெறுவது, அவற்றை மதிப்பீடு செய்வது, தோ்வு முடிவு வெளியீடு என தோ்வின் அனைத்து நிலைகள் குறித்தும் விரிவான விசாரணை தேவைப்படுகிறது.

மேலும், தோ்வரின் ஓஎம்ஆா் நகல், சிசிடிவி கேமரா பதிவுகள் என அனைத்தையும் உடனடியாக சமா்ப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும். ஊடக செய்திகள் மற்றும் போராட்டத்தின் அடிப்படையில் மட்டுமே தோ்வுகளை ரத்து செய்வதைவிட அந்தத் தோ்வில் நிகழ்ந்த முறைகேடுகள் முழுவதுமாக வெளியே கொண்டு வர வேண்டும்.

எனவே, இந்த விவகாரத்தில் சிபிஐ அல்லது உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி மேற்பாா்வையில் நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, வி மோகனா ஆகியோா் அடங்கிய அமா்வு இதுதொடா்பாக மத்திய அரசு, சிபிஐ, ஜாா்க்கண்ட் அரசு, ஜேபிஎஸ்சி பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.