ஒகேனக்கல் கூட்டுக் குடிநீரில் கழிவுநீர் கலக்கும் அபாயம்?

ஜோலார்பேட்டை அருகே ஒகேனக்கல் கூட்டுக் குடிநீரில் கழிவுநீர் கலக்கும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
Updated on
1 min read

ஜோலார்பேட்டை அருகே ஒகேனக்கல் கூட்டுக் குடிநீரில் கழிவுநீர் கலக்கும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் ரூ. 1,200 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டது. கொரட்டி, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி வழியாக இத்திட்டத்துக்கான குழாய்கள் பதிக்கும் பணி மேற்கொள்ளபட்டது. குடிநீர் விநியோகத்துக்காக ஆங்காங்கே நீரேற்றும் நிலையங்கள் அமைக்கப்பட்டன. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் கோடியூர் ஏரிப்பகுதியில் இருந்து குடிநீர் விநியோகம் தொடங்கப்பட்டது.
இதன் குழாய்கள் அருகே ஏரிக் கால்வாய் செல்கிறது. தற்போது, பெய்த மழையால் ஏரி நிரம்பி வருகிறது.
இந்நிலையில், நீரேற்று நிலைய குழாய் அருகே புதர் மண்டி, குப்பை சூழ்ந்துள்ளது. மேலும், கால்வாய் வழியாக வரும் கழிவுநீர் ஏரியில் கலக்கிறது. இதனால் நீரேற்றும் போது குடிநீர்க் குழாய்களில் கழிவுநீர் கலக்கும் அபாயம் உள்ளது.
மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளுக்கு விநியோகிக்கப்படும் இந்த ஒகேனக்கல் கூட்டுக் குடிநீரில் கழிவுநீர் கலப்பதால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
எனவே, குடிநீர்க் குழாய் உள்ள இடத்தில் தடுப்புச் சுவர் ஏற்படுத்தி, கழிவுநீர் கலப்பதைத் தடுக்க அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள்
எதிர்பார்க்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com