ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரம் விநியோகம்

வாணியம்பாடியில் நகரப் போக்குவரத்து போலீஸார் சார்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் புதன்கிழமை விநியோகிக்கப்பட்டன.

News image
Updated On :2 நவம்பர் 2017, 7:35 pm

DIN

வாணியம்பாடியில் நகரப் போக்குவரத்து போலீஸார் சார்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் புதன்கிழமை விநியோகிக்கப்பட்டன. வாணியம்பாடி  புதூர் தேசிய நெடுஞ்சாலை அணுகு சாலையில் செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனம் மீது பள்ளி வேன் மோதியதில் மாணவி இறந்தார். இதுபோன்ற விபத்துகள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன.
இந்நிலையில், விபத்துகள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நியூடவுன் பகுதியில் புதன்கிழமை நடைபெற்றது.
வாணியம்பாடி நகரப் போக்குவரத்து ஆய்வாளர் பாலாஜி தலைமை வகித்து, சாலைப் பாதுகாப்பு விதிகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.
மேலும், தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்தும், செல்லிடப்பேசியில் பேசியவாறு வாகனம் ஓட்டும் போது ஏற்படும் விபத்துகள் குறித்தும் எடுத்துரைத்தார். போக்குவரத்து உதவி ஆய்வாளர்  சரவணன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.