கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி சாவு

வாணியம்பாடி அருகே விவசாயக் கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி இறந்தார்.
Updated on
1 min read

வாணியம்பாடி அருகே விவசாயக் கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி இறந்தார்.
வாணியம்பாடியை அடுத்த அரப்பாண்டக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் நாகம்மாள் (70). இவர், புதன்கிழமை இரவு வீட்டின் அருகே நடந்து சென்ற போது அங்குள்ள தனியாருக்குச் சொந்தமான கிணற்றில் தவறி விழுந்தாராம். நாகம்மாளை காணாமல் உறவினர்கள் பல இடங்களில் தேடியுள்ளனர்.
இந்நிலையில், வியாழக்கிழமை காலை நாகம்மாள் கிணற்றில் இறந்து கிடந்தது தெரியவந்தது. தகவலறிந்த அம்பலூர் போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று கிணற்றில் இருந்து நாகம்மாளின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து அம்பலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com