மத்திய அரசைக் கண்டித்து வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே காங்கிரஸ் கட்சியினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு, வேலூர் மேற்கு மாவட்ட சிறுபான்மைத் துறை தலைவர் இலியாஸ்கான் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர்கள் ஜலீல்அகமது, கபீருதின், நகர எஸ்.சி.எஸ்.டி. பிரிவு தலைவர் ராஜ்குமார், சட்டப்பேரவை தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் பைசல் அமீன், ஆலங்காயம் ஒன்றியத் தலைவர் ஜெயபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர சிறுபான்மைத் துறை தலைவர் முதசீர்பாஷா வரவேற்றார்.
சிறுபான்மைத் துறை மாநிலத் தலைவர் அஸ்லம் பாஷா சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்து பேசியதாவது:
கருப்பு பணத்தை மீட்டு ஏழை, எளிய மக்களின் வங்கிக் கணக்கில் செலுத்துவதாகக் கூறிய மத்திய அரசின் பண மதிப்பு இழப்பு நடவடிக்கைக் காரணமாக பொருளாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
5.7 சதவீதமாக இருந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 2.7 சதவீதமாகக் குறைத்ததுடன், உள்நாட்டு உற்பத்தியைக் குறைத்து உலக அரங்கில் வளர்ந்து வரும் நாடாக இருந்த இந்தியாவை தற்போது வளர்ச்சி குறைந்த நாடாக மாற்றியுள்ளது என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் கவியரசன், ஈஸ்வரன், ஆம்பூர், திருப்பத்தூர், ஆலங்காயம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் பரீத்அஹமத் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.