"மகா மந்திரத்தை உச்சரிப்பதனால்  பாவங்கள் நீங்கி நன்மைகள் பெருகும்'

தினமும் மகா மந்திரம் சொல்வதன் மூலம் பாவங்கள் நீங்கி நன்மைகள் பெருகும் என முரளீதர சுவாமிகள் கூறினார்.
Updated on
1 min read

தினமும் மகா மந்திரம் சொல்வதன் மூலம் பாவங்கள் நீங்கி நன்மைகள் பெருகும் என முரளீதர சுவாமிகள் கூறினார்.
ராணிப்பேட்டை காட்- சத் சங்கம், மகாரண்யம் முரளீதர சுவாமிகள் தெய்வீகப் பேரவை சார்பில் ஆன்மிகச் சொற்பொழிவு மற்றும் 10-ஆம் ஆண்டு மகா மந்திர கூட்டுப் பிரார்த்தனை ராணிப்பேட்டையை அடுத்த பெல் நரசிங்கபுரம் அமிர்தவல்லி சமேத யோக நரசிம்மர் கோயிலில் புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மகாரண்யம் முரளீதர சுவாமிகள் பங்கேற்று கூட்டுப் பிரார்த்தனையைத் தொடங்கி வைத்து பேசியதாவது: 
ஒவ்வொருவரும் தினந்தோறும் மகா மந்திரம் சொல்வதன் மூலம் பாவங்கள் நீங்கி நன்மைகள் பெருகும். 
எல்லாவிதமான வழிபாட்டையும் விட மகா மந்திர கூட்டுப் பிரார்த்தனை செய்வதன் மூலம் வேண்டுதல்கள் நிறைவேறுவது மட்டுமல்லாது, மோட்சத்தையும் கொடுக்கும்.
 குறிப்பாக ஆதிசங்கரர், ராமானுஜர், ராமகிருஷ்ண பரஹம்சர் போன்ற குருமார்களை வழிபட்டு பின்பற்றுவோருக்கு அனைத்துவித நன்மைகளும் கிடைத்துள்ளது என்றார். 
திரளாக கலந்து கொண்ட பக்தர்களுக்கு  முரளீதர சுவாமிகள் அருளாசி வழங்கினார்.  நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ராணிப்பேட்டை காட்-சத் சங்கம், மகா ரண்யம் முரளீதர சுவாமிகள் தெய்வீகப்  பேரவை நிர்வாகிகள் ஆர்.அமிர்தகடேசன், கே.ஜி.ரகுநாதன், கோயில் நிர்வாகிகள் வீரராகவன், நடராஜன் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com