மத்திய கிழக்கு நாடுகளுக்கு இயக்கப்படும் ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மார்ச் 13 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப் படைகள் தாக்குதல் காரணமாக வளைகுடா நாடுகள் தங்களின் வான் வெளியை மூடிவிட்டதால், மத்திய கிழக்கு நாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்களின் சேவை மார்ச் 13 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படும் என்று ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
ஈரான் மீதான தாக்குதல் காரணமாக வான்வெளி மூடப்பட்டதால் வளைகுடா நாடுகளுக்கான விமானச் சேவையை பல்வேறு நாடுகளும் ரத்து செய்து வருகின்றன. அதுபோல, இந்தியாவிலிருந்து இயக்கப்படும் விமானங்களும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு வருகின்றன.
ஏர் இந்தியா நிறுவனம் கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி முதல் தொடர்ந்து மத்திய கிழக்கு நாடுகள் வழியாக இயக்கப்படும் சர்வதேச விமான சேவையை ரத்து செய்தது வருகிறது.
இந்த தற்காலிக ரத்து மார்ச் 10 வரை தொடரும் என ஏர் இந்தியா நிறுவனம் முன்னதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மார்ச் 13 ஆம் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
ரத்து செய்யப்பட்ட விமானங்களில் முன்பதிவு செய்திருந்த பயணிகள் எந்த கூடுதல் கட்டணமும் இல்லாமல் பயணத்தின் தேதியை மாற்றிக்கொள்ளலாம் என்றும் இல்லையெனில் பயணத்தை ரத்து செய்து செலுத்தி முழு பணத்தையும் திரும்பப்பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
Air India has announced that its flights to Middle Eastern countries have been cancelled and have been extended until March 13.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இஸ்ரேலுக்கு மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!

கோவை - அபுதாபி விமான சேவை மாா்ச் 28 வரை ரத்து!

மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்பு!

மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு


