பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

கிணற்றிலிருந்து மாணவரின் சடலம் மீட்பு

வாணியம்பாடி அருகே கிணற்றில் இருந்து பள்ளி மாணவரின் சடலம் மீட்கப்பட்டது. 

News image
Updated On :16 நவம்பர் 2017, 8:06 pm

DIN

வாணியம்பாடி அருகே கிணற்றில் இருந்து பள்ளி மாணவரின் சடலம் மீட்கப்பட்டது. 
வாணியம்பாடியை அடுத்த கொடையாஞ்சி பகுதியைச் சேர்ந்தவர் சந்துரு (15). இவர், அம்பலூர் அரசு மேல் நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். புதன்கிழமை காலை வீட்டை விட்டு சென்ற சந்துரு இரவு வீடு திரும்பவில்லையாம். உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லையாம். இந்நிலையில் வியாழக்கிழமை காலை கொடையாஞ்சி பாலாற்றின் அருகே உள்ள தனியாருக்குச் சொந்தமான விவசாயக் கிணற்றில் சந்துரு சடலமாகக் கிடந்ததைப் பார்த்த அப்பகுதி மக்கள் அம்பலூர் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து போலீஸார் அங்கு சென்று சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
இதுகுறித்து அம்பலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.