வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

குடிநீரில் கலந்த கழிவுநீர்: சரிசெய்யும் பணி தீவிரம்

வேலூர் வேலப்பாடி பகுதியில் கழிவுநீர் கலந்த குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவது குறித்து பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்ததைத் தொடர்ந்து, சரிசெய்யும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர

News image
Updated On :16 நவம்பர் 2017, 7:48 pm

DIN

வேலூர் வேலப்பாடி பகுதியில் கழிவுநீர் கலந்த குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவது குறித்து பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்ததைத் தொடர்ந்து, சரிசெய்யும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 
வேலூர் மாநகராட்சி 38-ஆவது வார்டுக்குள்பட்ட மரக்கடை சந்து, சேர்வை முனுசாமி, நல்லாம்பட்டறை, வண்டிபாளையம், பெரிய தனம் சுப்பராய முதலி தெரு ஆகிய பகுதிகளுக்கு மாநகராட்சி மூலம் விநியோகிக்கப்படும் குடிநீரில் கடந்த திங்கள்கிழமை (நவம்பர் 13) முதல் கழிவுநீர் கலந்து வந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார் தெரிவித்ததைத் தொடர்ந்து, குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்ட பகுதியைக் கண்டறிந்து சீரமைக்கும் முயற்சியில் மாநகராட்சி ஊழியர்கள் புதன்கிழமை ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.