கபடி போட்டி: ஊரீசுக் கல்லூரி முதலிடம்

திருவள்ளுவர் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையில் நடைபெற்ற கபடி போட்டியில் ஊரீசுக் கல்லூரி அணி முதலிடம் பெற்றது.
Published on

திருவள்ளுவர் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையில் நடைபெற்ற கபடி போட்டியில் ஊரீசுக் கல்லூரி அணி முதலிடம் பெற்றது.
 திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பாரதி பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற கபடி போட்டியில் 12 கல்லூரிகள் கலந்து கொண்டன. இறுதிப் போட்டியில் ஊரீசுக் கல்லூரி அணியும், காட்பாடி ஆக்ஸீலியம் மகளிர் கல்லூரி அணியும் மோதின.
 இதில், ஊரீசுக் கல்லூரி 39-9 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது.  ஊரீசுக் கல்லூரி முதல்வர் இ.ஸ்டான்லி ஜோன்ஸ் கருணாகரன், துணை முதல்வர்கள் டி.பால்ராஜ், பால்வின் நம்பிக்கை ராஜ், நிதியாளுநர் எம்.ஜெயசெல்வதாஸ் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவியர், கல்லூரியின் உடற்கல்வி துறை இயக்குநர் என்.அன்பு, பயிற்சியாளர்கள் ஆறுமுகதாஸ், கிருஷ்ணன் ஆகியோரைப் பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com