மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

ஆம்பூர் அருகே வனப்பகுதியில் உருவான நீர்வீழ்ச்சி

ஆம்பூர் அருகே வனப்பகுதியில் உருவான நீர்வீழ்ச்சியில் பொதுமக்கள் குளித்து மகிழ்ந்தனர்.

News image
Updated On :20 அக்டோபர் 2017, 8:52 pm

DIN

ஆம்பூர் அருகே வனப்பகுதியில் உருவான நீர்வீழ்ச்சியில் பொதுமக்கள் குளித்து மகிழ்ந்தனர்.
ஆம்பூர் அருகே சில வாரங்களாக பெய்த பருவமழையால் வனப்பகுதியில் ஆங்காங்கே நீருற்றுகள் தோன்றி உள்ளன. கானாறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து வந்த வண்ணம் உள்ளது. இதனால் ஏரி, குளம், குட்டை, தடுப்பணைகள், கசிவுநீர் குட்டைகள் நிரம்பி வருகின்றன. மிட்டாளம் ஊராட்சி, ராள்ளக்கொத்தூர் காலனிக்கு மேற்கே துருகம் கானாறு ஜர்க்கிப்பண்டை (வழுக்குப் பாறை) என்ற இடத்தில் நீர்வீழ்ச்சி உருவாகி தண்ணீர் கொட்டுகிறது. இந்த நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்காக  ஆம்பூர் சுற்று வட்டாரர் பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள், பெண்கள், சிறுவர்கள் என திரளானோர் தினந்தோறும் அங்கு சென்று வருகின்றனர். சிலர் அங்கேயே உணவு தயாரித்து உண்டும் மகிழ்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.