முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

போலி நகைகளை அடகு வைத்து ரூ.13.44 லட்சம் மோசடி: தனியார் நிதிநிறுவன மேலாளர் கைது

வேலூரில் போலி நகைகளை அடகு வைத்து ரூ. 13.44 லட்சம் மோசடி செய்ததாக தனியார் நிதி நிறுவனத்தின் கிளை மேலாளரை போலீஸார் கைது செய்தனர்.

Updated On :19 ஏப்ரல் 2018, 1:17 am IST

வேலூரில் போலி நகைகளை அடகு வைத்து ரூ. 13.44 லட்சம் மோசடி செய்ததாக தனியார் நிதி நிறுவனத்தின் கிளை மேலாளரை போலீஸார் கைது செய்தனர்.
வேலூர்-ஆரணி சாலையில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் கிளை மேலாளராக வினோத்குமார் பணியாற்றி வந்தார். இந்த நிறுவனத்தில் பொதுமக்கள் தங்கள் நகைகளை அடகு வைத்து பணம் பெற்று வருகின்றனர். 
அதன்படி, வேலூரைச் சேர்ந்த சிவசங்கரன், பாஸ்கர், சார்லி, சரண்ராஜ், சத்தியநாராயணன் ஆகியோர் 85 பவுன் நகைகளை அடகு வைத்து ரூ. 13 லட்சத்து 44 ஆயிரத்து 296 கடன் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், அவர்கள் அடகு வைத்த நகைகளை பரிசோதனை செய்தபோது அவை தங்க முலாம் பூசப்பட்ட போலி நகைகள் என்பது தெரியவந்தது. மேலும், போலி நகைகளை அடகு வைத்து கடன் பெற கிளை மேலாளர் வினோத்குமார் உடந்தையாக செயல்பட்டிருப்பதும் தெரியவந்தது. 
இதையடுத்து, தனியார் நிதிநிறுவன அதிகாரி சத்தியமூர்த்தி வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து வினோத்குமாரை புதன்கிழமை கைது செய்தனர். மேலும், இந்த மோசடியில் தொடர்புடைய 5 பேரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.