அதி வேகத்தில் சென்ற ரயிலால் அதிர்ச்சியடைந்த முதியவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
வாணியம்பாடி அருகே அம்பலூர் பகுதியைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி (80). இவர், செவ்வாய்க்கிழமை இரவு வாணியம்பாடி அருகே தண்டவாளத்தைக் கடப்பதற்காக நின்று கொண்டிருந்தார். அப்போது, சென்னையில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி அதி வேகத்தில் வந்த விரைவு ரயிலின் அதிர்வால் அவர் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அருகே இருந்தவர்கள் சின்னத்தம்பியை மீட்டு, வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் புதன்கிழமை இறந்தார். இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்த படத்தைப் பார்த்து அண்ணாவும் கருணாநிதியும் பாராட்டினார்கள்! கவிஞர் கண்ணதாசனின் கட்டுரைத் தொடர்! - 4

சிறையில் கைதிகள் படுகொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்






