மத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

வேளாங்கண்ணிக்கு புனித யாத்திரை

வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரம் பகுதியில் இருந்து 100-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் வேளாங்கண்ணிக்கு ஞாயிற்றுக்கிழமை புனித யாத்திரையைத் தொடங்கினர்.

Updated On :20 ஆகஸ்ட் 2018, 6:08 am IST

வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரம் பகுதியில் இருந்து 100-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் வேளாங்கண்ணிக்கு ஞாயிற்றுக்கிழமை புனித யாத்திரையைத் தொடங்கினர்.
வேளாங்கண்ணி திருவிழா செப்டம்பர் 8-ஆம் தேதி தேதியும், அதற்கு முன் கொடியேற்றும் நிகழ்ச்சி ஆகஸ்ட் 30-ஆம் தேதியும் நடைபெறுகின்றன. கொடியேற்ற விழாவில் பங்கேற்க வேலூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரம் பங்கினைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கடந்த 60 நாள்களுக்கு முன் தயாரிப்பு ஒருத்தலை கடைப்பிடித்து வந்தனர். 
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஜெப வழிபாட்டுடன் உதயேந்திரம் இருதய ஆண்டவர் ஆலயத்திலிருந்து வேளாங்கண்ணி மாதா தேரை இழுத்துக் கொண்டு நடைபயணமாகப் புறப்பட்டுச் சென்றனர். 10 நாள்கள் தொடர் நடைபயணமாகச் சென்று ஆகஸ்ட் 29-ஆம் தேதி வேளாங்கண்ணி திருத்தலத்தை அடைகின்றனர். பங்குதந்தை ராயப்பன் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு புனித யாத்திரையைத் தொடங்கினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.