ரேஷன் அரிசி கடத்தல்: தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

ரயிலில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதைத் தடுக்க சிறப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Updated on
1 min read

ரயிலில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதைத் தடுக்க சிறப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர், குடியாத்தம், காட்பாடி, அரக்கோணம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் ரயில் மூலம் வெளி மாநிலங்களுக்கு மூட்டைகளில் தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தப்படுகிறது. இவற்றை போலீஸார் பறிமுதல் செய்து நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைக்கின்றனர். 
ரயில் சிக்னலில் நிற்கும் போதும், மெதுவாக செல்லும் போதும் முள்புதர்களின் மறைவில் வைத்திருக்கும் ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்தல்காரர்கள் ரயிலில் ஏற்றி விடுகின்றனர். பின்னர், அதை வெளிமாநிலங்களுக்கு கடத்திச் சென்று விற்கின்றனர். 
அவ்வாறு சில நேரங்களில் மட்டும் கடத்தல்காரர்கள் கைது செய்யப்படுகின்றனர். ஆனால் அவர்கள் வெளியே வந்து தொடர்ந்து கடத்தலில் ஈடுபடுகின்றனர். இவர்களை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து, பிணையில் வெளியில் வர முடியாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கூறுகின்றனர். இதுகுறித்து துறை சார்ந்த உயரதிகாரியிடம் கேட்டபோது, மாவட்ட வழங்கல் அலுவலர் அலுவலகத்தின் கீழ் தனி வட்டாட்சியர் பறக்கும் படை மற்றும் ரயில்வே போலீஸில் அரிசி கடத்தல் தடுப்பு சிறப்பு பிரிவு என உள்ளது. இருந்த போதிலும், கடத்தல் சம்பவங்கள் தொடர்கின்றன. தண்டனைகள் கடுமையானால் தான் குற்றங்கள் குறையும் என்றார் அவர்.
எனவே, ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்க சிறப்பு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் எதிர்பார்க்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com