மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

நியாய விலைக் கடை ஊழியர்கள் வேலைநிறுத்தம்

சமவேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் மாவட்டத்தில் நியாய விலைக் கடை ஊழியர்கள்

Updated On :9 ஜூலை 2018, 7:24 pm

சமவேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் மாவட்டத்தில் நியாய விலைக் கடை ஊழியர்கள் திங்கள்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால், மாவட்டம் முழுவதும் நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருள்களின் விநியோகம் முழுமையாக பாதிக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் சுமார் 35 ஆயிரம் நியாய விலைக் கடைகள் உள்ளன. இவற்றில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். இந்நிலையில், கூட்டுறவு, உணவுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் சட்டப்பேரவையில் கடந்த 2-ஆம் தேதி நடைபெற்றது. அப்போது, நியாய விலைக் கடை ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எவ்வித அறிவிப்பும் வெளியிடப்
படாததால் அரசுப் பணியாளர் சங்கத்துடன் இணைந்து, தமிழ்நாடு நியாய விலைக் கடை பணியாளர்கள் சங்கம் சார்பில், திங்கள்கிழமை ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
இதன்படி, வேலூர் மாவட்டத்தில் உள்ள நியாய விலைக் கடை ஊழியர்கள் திங்கள்கிழமை பணிக்குச் செல்லவில்லை. இதனால், மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட நியாய விலைக் கடைகள் அடைக்கப்பட்டிருந்ததுடன், அத்தியாவசியப் பொருள்களின் விநியோகம் பாதிக்கப்பட்டது. இதனால், நியாய விலைக் கடைகளில் பொருள்கள் வாங்க வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இதன்தொடர்ச்சியாக, நியாய விலைக் கடை ஊழியர்கள் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு நியாய விலைக் கடை பணியாளர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் செல்வம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் பார்த்திபன், அமைப்புச் செயலர் ஜெயவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் மோகன் வரவேற்றார்.
 ஆர்ப்பாட்டத்தில், சமவேலைக்கு சம ஊதியம், ஓய்வூதியம், பணி நிரந்தரம், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில், மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான நியாய விலைக் கடை ஊழியர்கள் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.