பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம் மின்வெட்டை நீக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி ஜூன் 17-ல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்
/

வேன் மீது பைக் மோதல்: முதியவர் சாவு

ஆம்பூர் அருகே வேன் மீது பைக் மோதிய விபத்தில் முதியவர் ஞாயிற்றுக்கிழமை இறந்தார்.

Updated On :24 ஜூலை 2018, 12:38 am IST

ஆம்பூர் அருகே வேன் மீது பைக் மோதிய விபத்தில் முதியவர் ஞாயிற்றுக்கிழமை இறந்தார்.
மாதனூர் அருகே பாலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அப்துல் ரஹ்மான் (62).  இவரது மனைவி மும்தாஜ் (58). இருவரும் ஞாயிற்றுக்கிழமை பைக்கில் ஆம்பூர் வந்துவிட்டு பாலூருக்கு சென்றுகொண்டிருந்தனர். வெங்கிளி கிராமம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வேன் மீது மோதியது. 
இதில் காயமடைந்த அப்துல் ரஹ்மான் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். மும்தாஜ் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.  
இதுகுறித்து ஆம்பூர் கிராமிய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.