மத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

முன்னாள் நிதி அமைச்சர் பா.சிதம்பரத்திடம் மத்திய அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தி வருவதைக் கண்டித்து ராணிப்பேட்டையில் வேலூர்

Updated On :8 ஜூன் 2018, 12:42 am IST

முன்னாள் நிதி அமைச்சர் பா.சிதம்பரத்திடம் மத்திய அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தி வருவதைக் கண்டித்து ராணிப்பேட்டையில் வேலூர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஐஎன்எக்ஸ் நிதி முறைகேடு வழக்கில் தொடர்புடையதாகக் கூறி முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதைக் கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் வேலூர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ராணிப்பேட்டை முத்துகடை காந்தி சிலை முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு, ராணிப்பேட்டை நகர காங்கிரஸ் தலைவர் எஸ். அண்ணாதுரை தலைமை வகித்தார். வேலூர் கிழக்கு மாவட்டத் தலைவர் சி.பஞ்சாட்சரம், மாவட்ட எஸ்.சி.,எஸ்.டி. பிரிவு  தலைவர் வி. நாகேஷ், மாவட்ட மகளிர் அணி தலைவர் சந்திரா, மாவட்டப் பொதுக்குழு உறுப்பினர் ராணி கே.வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டப் பொதுக்குழு உறுப்பினர் கே.முருகன் வரவேற்றார்.
இதில், நாங்குனேரி எம்எல்ஏவும், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் துணைத் தலைவருமான எச்.வசந்தகுமார் பங்கேற்று பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.