நாட்டறம்பள்ளி அருகே அனுமதியின்றி ஓட்டல், தேனீர் கடைகளில் பயன்படுத்திய வீட்டு உபயோக 15 கேஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
நாட்டறம்பள்ளியை அடுத்த வெலகல்நத்தம், பச்சூர், டோல்கட் ஆகிய பகுதிகளில் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர்கள் ஓட்டல் மற்றும் தேனீர் கடைகளில் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதாக மாவட்ட வட்ட வழங்கல் அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் ஜெயகுமார் தலைமையில் நாட்டறம்பள்ளி வட்ட வழங்கல் அலுவலர் பூங்கொடி மற்றும் வருவாய்த் துறையினர் வியாழக்கிழமை திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வெலகல்நத்தம் பச்சூர், டோல்கட் ஆகிய பகுதிகளில் முறைகேடாக பயன்படுத்திய வீட்டு உபயோக 15 கேஸ் சிலிண்டர்களை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட சிலிண்டர்கள் திருப்பத்தூர் நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைக்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கார்கில் போர் நினைவிடத்தில் அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை!

யானைகள் நடமாட்டம்! குறிஞ்சி பூக்களைப் பார்வையிட பொதுமக்களுக்குத் தடை!

மேக்கேதாட்டு அணை; கன்னட அமைப்பினர் போராட்டம்: தமிழக அரசுப் பேருந்துகள் ஓசூர் வரை இயக்கம்!

இந்தியாவைக் காத்த வீரர்களுக்கு நன்றி: கார்கில் போர் நினைவுநாளில் பிரதமர் மோடி
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP


