ஆலங்காயம் பேரூராட்சியில் தீவிர வரி வசூல்
ஆலங்காயம் சிறப்பு நிலை பேரூராட்சியில் தீவிர வரி வசூல் செய்யப்பட்டது.


ஆலங்காயம் சிறப்பு நிலை பேரூராட்சியில் தீவிர வரி வசூல் செய்யப்பட்டது.
வாணியம்பாடியை அடுத்த ஆலங்காயம் சிறப்புநிலை பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளிலும் 2017-18-ஆம் ஆண்டிற்கான சொத்து வரி, தொழில் வரி மற்றும் கடை வாடகை உள்ளிட்டவை செயல் அலுவலர் ர.ஆனந்தன் தலைமையில் பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் வரிவசூல் செய்து வருகின்றனர். மேலும், மார்ச் 5-ஆம் தேதிக்குள் பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, தொழில் வரி மற்றும் கடை வாடகையை தவறாமல் கட்ட வேண்டும். தவறினால் ஜப்தி உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என செயல் அலுவலர் ர.ஆனந்தன் எச்சரிக்கை விடுத்துள்ளார். வரி வசூல் குறித்து அனைத்து வார்டுகளில் ஒலிப்பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு பேரூராட்சிப் பணியாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...