மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

அரசுப் பள்ளிகளில் ஆண்டு விழா அமைச்சர் பங்கேற்பு

வாணியம்பாடியில் அரசுப் பள்ளிகளில் நடைபெற்ற ஆண்டு விழாக்களில் அமைச்சர் நீலோபர் கபீல் பங்கேற்று மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.  

Updated On :29 மார்ச் 2018, 7:39 pm

வாணியம்பாடியில் அரசுப் பள்ளிகளில் நடைபெற்ற ஆண்டு விழாக்களில் அமைச்சர் நீலோபர் கபீல் பங்கேற்று மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.  
 வாணியம்பாடியை அடுத்த கிரிசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தலைமையாசிரியர் துரை  தலைமை வகித்தார்.  கிராம கல்வி குழுத் தலைவர் தினேஷ், முன்னாள் ஊராட்சித் தலைவர் லீலாவதி சிவானந்தம், ஆறுமுகம், மணி, ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியை   வசந்தி ஆண்டறிக்கையை வாசித்தார். வாணியம்பாடி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் உஷா, ஓய்வு பெற்ற சர்க்கரை ஆலை ஊழியர் கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். சிறப்பு அழைப்பாளராக தொழிலாளர் நலத்துறை அமைச்சர்  நீலோபர்கபீல் கலந்து கொண்டு பள்ளி விளையாட்டு மற்றும் ஆண்டு விழாவை முன்னிட்டு நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கிப் பாராட்டினார். தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந் தது. ஊர் முக்கிய பிரமுகர்கள், நிர்வாகிகள், பொது மக்கள் கலந்துக் கொண்டனர். ஆசிரியர் ராபிஆமன்குமார் நன்றி கூறினார்.
நியூடவுன் நகராட்சி முஸ்லிம் ஆண்கள் உருது தொடக்கப்பள்ளியில்  நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, வேலூர்  மாவட்ட உருது உதவி தொடக்கக்கல்வி அலுவலர் ஹபீபுர்ரஹ்மான் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் வசீம்அக்ரம், பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஜபீன், முத்துவல்லி அஸ்மத் பாஷா, கதீர்அஹமத்  முன்னிலை வகித்தனர்.  தலைமையாசிரியர் அமீருன்னிசா 
வரவேற்றார். 
சிறப்பு அழைப்பாளராகஅமைச்சர்  நீலோபர்கபீல் கலந்து கொண்டு பள்ளி ஆண்டு     மற்றும்    விளையாட்டு விழாவை முன்னிட்டு நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கிப் பாராட்டினார். தொடர்ந்து பள்ளி   வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டது. ஆசிரியர் ஜபீன்பேகம் நன்றி கூறினார்.  படவிளக்கம் - வாணியம்பாடி     அடுத்த  கிரிசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி ஆண்டு விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அமைச்சர் நீலோபர்கபீல் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

பள்ளிகுப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில்...
மாதனூர் அருகே பள்ளிகுப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆண்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, மாதனூர் கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மாதேஷ் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் சேகர் வரவேற்றார். உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திருப்பதி, வட்டார வள மைய  மேற்பார்வையாளர் (பொறுப்பு) தமிழ்ச்செல்வன், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் அன்பழகன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். பேர்ணாம்பட்டு ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியர் ஹரிஹரன் கலந்து கொண்டார்.
விழாவையொட்டி, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இதையடுத்து வரும் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றது. 4 மாணவர்கள் விழா மேடையிலேயே 1-ஆம் வகுப்பில் சேர்ந்தனர். அவர்களுக்கு மாலை மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டு, தமிழக அரசின் இலவச பொருள்கள் வழங்கப்பட்டன.  
பள்ளியில் புரவலராகச் சேர்ந்த பொதுமக்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும், மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கிராம பொதுமக்கள் சார்பில் பள்ளி ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
மாதனூர் ஒன்றியத்தைச் சேர்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் ரவிசந்திரன், சுப்பிரமணி, ஞானசெல்வி, சகுந்தலா, கிருஷ்ணமூர்த்தி, பானுமதி, குணசேகரன், பாரதி ஆகியோர் கலந்து கொண்டனர். ஆசிரியை ரேவதி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். ஆசிரியை நளினசங்கரி நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.