
வாணியம்பாடி காவலர் குடியிருப்புப் பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழா செவ்வாய், புதன் ஆகிய இரு நாள்கள் நடைபெற்றது.
வாணியம்பாடி அரசினர் தோட்டத்தில் உள்ள காவலர் குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள முத்து மாரியம்மன் கோயிலின் 42-ஆம் ஆண்டு திருவிழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
பிற்பகல் 1 மணியளவில் கூழ் வார்த்தல் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து, புதன்கிழமை காலை சென்னாம்பேட்டை பாலாற்றங்கரையில் அம்மன் கரகம் அலங்கரிக்கப்பட்டு, பொன்னியம்மன் கோயில் மற்றும் நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று கோயிலை அடைந்தது. பிற்பகல் 12 மணியளவில் தீ மிதி விழா, அன்னதானம் ஆகியவை நடைபெற்றன.
விழாவில், டி.எஸ்.பி. முரளி, காவல் ஆய்வாளர்கள் ராமசந்திரன், சுரேஷ், சாந்தலிங்கம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






