59 நிமிடங்களில் ரூ. 1 கோடி வரை கடனுக்கான முதல்கட்ட அனுமதி: இணையதளத்தில் பதிவு செய்வதற்கு கட்டணம் வசூல்...?

பிரதமர் அறிவித்த 59 நிமிடங்களில் ரூ. 1 கோடி வரை கடனுக்கான முதல்கட்ட அனுமதி பெறுவதற்காக
Updated on
3 min read

பிரதமர் அறிவித்த 59 நிமிடங்களில் ரூ. 1 கோடி வரை கடனுக்கான முதல்கட்ட அனுமதி பெறுவதற்காக இணையதளத்தில் பதிவு செய்வதற்கு கட்டணம் வசூலிக்கப்படுவதால் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகளை நவம்பர் 2-ஆம் தேதி காணொலி மூலம் அறிவித்தார். விவசாயத்துக்கு அடுத்தபடியாக முக்கிய துறையாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை விளங்குவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் முக்கியமானதாக ரூ. 1 கோடி வரையில் கடன் பெறுவதற்கு இணையதளம் மூலம் பதிவு செய்தால் கடனுக்கு 59 நிமிடங்களில் முதல்கட்ட அனுமதி வழங்குவதற்கான நடைமுறை தொடங்கி வைக்கப்பட்டது.  
அந்த  ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ல்ள்க்ஷப்ர்ஹய்ள்ண்ய்59ம்ண்ய்ன்ற்ங்ள்.ஸ்ரீர்ம்/ட்ர்ம்ங் என்ற 
இணையதளத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களின் ஜிஎஸ்டி எண், வருமான வரி தாக்கல் செய்யப்பட்டதற்கான படிவம், வங்கிக் கணக்கின் 6 மாத நடவடிக்கைகள், நிறுவனத்தின் இயக்குநர் (அல்லது) உரிமையாளரின் அடிப்படை, தனிப்பட்ட மற்றும் கல்வித் தகுதி சம்பந்தமான விவரங்கள் ஆகியவற்றை பதிவேற்றம் செய்தால் 59 நிமிடங்களில் கேட்கப்படும் கடனுக்கு முதல் கட்ட அனுமதி வழங்கப்படுகிறது.
பதிவு செய்வதற்கு கட்டணம்: பிரதமர் நரேந்திர மோடியால் இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்ட உடன் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் அந்த இணையதளத்துக்கு சென்று கடன் கேட்டு விண்ணப்பிக்க தங்களைப் பதிவு செய்யத் தொடங்கினர்.  பதிவு செய்தவர்களுக்கு இறுதியாக ரூ. 1,180 சேவைக் கட்டணம் செலுத்த வேண்டுமென்ற அறிவிப்பு வந்தது.
 இதைத் தொடர்ந்து சேவைக் கட்டணம் செலுத்தியவர்களின் பதிவு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
இணையதளத்தில் பதிவு செய்ய ரூ. 1,180 சேவைக் கட்டணம் செலுத்த வேண்டுமென கூறியுள்ளது குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு இடையே அதிருப்தியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு இடையே உருவாகியுள்ள சந்தேகங்கள்: பிரதமர் நரேந்திர மோடியால் அறிவிக்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம் வங்கிகள் மற்றும் கடன் கேட்பவர்களுக்கு இணைப்புப் பாலமாக இணையதளத்தை உருவாக்கியுள்ள குஜராத் மாநிலம் ஆமதாபாத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும்  இஹல்ண்ற்ஹரர்ழ்ப்க் டப்ஹற்ச்ர்ழ்ம் டஸ்ற். கற்க் செயல்படுகிறது என இணையதளத்தின் விதிமுறைகள், நிபந்தனைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது தனியார் நிறுவனமாகும்.
இதில், கடன் கேட்டு பதிவு செய்துள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் தகவல்களை 3-ஆவது தரப்பு முகமைகளுக்கு அனுப்பி, அதை சரிபார்த்து, உரிய அறிக்கைகள் பெற்று, அதை கடன் தர விரும்பும் வங்கிகளுக்கு அனுப்பி வைக்கும் இணைப்புப் பாலமாக அந்த இணையதளம் இயங்குகிறது. முதல்கட்ட அனுமதி மட்டுமே வழங்கப்படுகிறது.  நிச்சயமாக கடன் வழங்கப்படும் என்ற உறுதிமொழியை அந்த இணையதளம் வழங்காது. இந்த இணையதளத்தில் பதிவு செய்வதன் மூலம், கடன் கேட்பவர்களுக்காக, கடன் கேட்பவர்களிடமிருந்து பெறப்படும் தகவல்கள், அதுகுறித்து சரிபார்க்கவும், உரிய அறிக்கைகளை தயாரிக்கவும் மூன்றாம் தரப்பு முகமைகளை அமர்த்திக் கொள்வதற்கு இணையதள நிறுவனத்துக்கு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அனுமதி தானாகவே வழங்கப்படுகிறது. 
அதேபோல பதிவு செய்தவர்களை வங்கிகள் தொடர்புகொள்ளும். அவ்வாறு தொடர்பு கொள்ளும்போது கடன் பெறுவதற்கும், கடன் வழங்குவதற்கும் உள்ள நிபந்தனைகள் மற்றும் கோரப்படும் கூடுதல் தகவல்களை பரஸ்பரம் கடன் வழங்குபவரும், கடன் பெறுபவரும் பேசி முடிவு செய்து கொள்வார்கள்.  ஏதேனும் இழப்பு, காலதாமதம் உள்ளிட்டவை ஏற்பட்டால் அதற்கு இந்த இணையதள நிறுவனம் பொறுப்பேற்காது.  
அவ்வாறு பதிவு செய்யும்போது இணையதளச் சேவைக்காக அந்த தனியார் இணையதள நிறுவனம்  ச்ஹஸ்ரீண்ப்ண்ற்ஹற்ண்ர்ய் ர்ழ் ஸ்ரீர்ய்ஸ்ங்ய்ண்ங்ய்ஸ்ரீங் ச்ங்ங்ள் என்ற பெயரில் சேவைக் கட்டணத்தை வசூலிக்கிறது. தற்போது பதிவு செய்த குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்கள் ரூ. 1,180-ஐ கட்டணமாகச் செலுத்தியுள்ளதாகக் கூறுகின்றனர். அந்த சேவைக் கட்டணம் எக்காரணத்திற்கொண்டும் திருப்பி வழங்கப்படமாட்டாது என இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு முக்கிய திட்டமாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், அந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவது தனியார் நிறுவனமாக இருப்பது தொழில் துறையினரிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறையில் மற்ற நாடுகளைக் காட்டிலும் வளர்ந்துள்ள இந்தியா அரசால் அறிவிக்கப்பட்ட திட்டத்தைச் செயல்படுத்த தனியார் இணையதள நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது தொழில் துறையினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசே அந்த இணையதளத்தை உருவாக்கி பயன்பாட்டிற்கு கொண்டு வந்திருக்கலாம். அந்த இணையதளத்தில் பதிவு செய்வதற்கு கட்டணம் இல்லையெனவும் அறிவித்திருக்கலாம். அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாய் தனியார் நிறுவனத்துக்கு செல்வது தொழில் முனைவோர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. 
அதோடு மட்டுமல்லாமல் இதுவரை 1.69 லட்சம் பேர் அந்த இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர். அவ்வாறு பார்க்கும்போது இதுவரை சேவைக் கட்டணம் ரூ. 19.23 கோடி அந்த தனியார் நிறுவனத்துக்கு சென்றுள்ளது. சேவைக் கட்டணம் அரசுக்கும் செல்லவில்லை, வங்கிகளுக்கும் செல்லவில்லை. இருந்தபோதிலும், கடன் கேட்டு இணையதளத்தில் பதிவு செய்தவர்களுக்கு வங்கிகள் கடன் வழங்காமல் போனாலும் அதற்காக அந்த இணையதள நிறுவனம் பொறுப்பேற்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடன் கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும், சேவைக் கட்டணம் ரூ.1, 180 செலுத்தினால் திரும்பக் கிடைக்காது. இவ்வாறு கட்டணம் வசூலிப்பது குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். கட்டணமில்லாமல் பதிவு செய்வதற்கான வசதியை மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும்.
அதேநேரத்தில் பதிவு செய்யும் போது குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர்களால் அளிக்கப்படும் தகவல்களை உறுதிப்படுத்தவும், பகுப்பாய்வு செய்யவும் மூன்றாம் தரப்பு முகமைகளை அந்த தனியார் இணையதள நிறுவனம் நியமித்துக் கொள்ளவும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களிடமிருந்து அங்கீகாரத்தைப் பதிவு செய்வதன் மூலம் பெற்றுக் கொள்கின்றனர். 
தகவல்கள் ரகசியம் காக்கப்படும் என இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோரின் தகவல்களை கையாள்வது தனியார் நிறுவனமாக உள்ளது.  அதேபோல தொழில் முனைவோரின் தகவல்களை உறுதிபடுத்துவதற்காகவும், பகுப்பாய்வு செய்வதற்காகவும் மூன்றாம் தரப்பு முகமைகளிடம் அளிக்கப்படும்போது ரகசியங்கள் கசிய வாய்ப்புள்ளது என தொழில் முனைவோர்கள் சந்தேகிக்கின்றனர்.
இத்தகைய சூழ்நிலையில் சம்பந்தப்பட்ட இணையதளத்தை தனியார் நிறுவனத்திடமிருந்து அரசே பெற்று, ஏற்று நடைமுறைப்படுத்த வேண்டும். அந்த இணையதளத்தில் பதிவு செய்வதற்கான சேவைக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.  பதிவு செய்வதை இலவசம் என அறிவிக்க வேண்டும்.  இந்தப் பிரச்னையை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோரின் நலனில் அக்கரை கொண்டுள்ள தொழில் முனைவோர் சங்கங்கள் மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு காண வேண்டுமென தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கத்தின் (டான்ஸ்டியா) செயற்குழு உறுப்பினரும், வேலூர் மாவட்ட குறு மற்றும் சிறுதொழில் முனைவோர் சங்கத்தின் மாவட்ட தலைவருமான எம்.வி. சுவாமிநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com