15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

மேற்கு வங்கம்: மாலை 6 மணி வரை 91.74% வாக்குகள் பதிவு!

மேற்கு வங்க தேர்தல் வாக்குப்பதிவு 6 மணி நிலவரம்...

News image
Updated On :23 ஏப்ரல் 2026, 2:23 pm

மேற்கு வங்க மாநிலத்தில் இன்று மாலை 6 மணி நிலவரப்படி 91.74 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்று வந்த முதல்கட்ட வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது.

மேற்கு வங்கத்தில் முதல் கட்டமாக காலை 7 மணி முதல் நடைபெற்று வந்த வாக்குப் பதிவு மாலை 6 மணியுடன் முடிந்தது. மாலை 6 மணி நிலவரப்படி 91.74% வாக்குகள் பதிவாகியுள்ளது.

294 உறுப்பினர்களைக் கொண்ட மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு இரு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்டமாக 152 தொகுதிகளுக்கு இன்று நடைபெற்றது.

இரண்டாம் கட்டமாக 142 தொகுதிகளுக்கு ஏப். 29-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. மே 4-இல் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் தொடர்ந்து நான்காவது முறையாக ஆட்சிக்கு வர முனைப்பு காட்டும் நிலையில், அக்கட்சியிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்ற பாஜக களமிறங்கியுள்ளது. காங்கிரஸ், இடதுசாரி கூட்டணிகளும் களத்தில் உள்ளன.

தற்போது முதல்கட்ட வாக்குப் பதிவு நடைபெற்ற 152 தொகுதிகளில் கடந்த 2021 தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் 93 இடங்களையும், பாஜக 59 இடங்களையும் கைப்பற்றியிருந்தன.

Summary

The Election Commission of India has stated that 91.74 percent of votes were recorded in the state of West Bengal as of 6 PM today.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.