மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்ததாக பேராசிரியர் மீது நடவடிக்கை கோரி அரக்கோணம் அருகே உள்ள கல்லூரி மாணவ, மாணவிகள் திங்கள்கிழமை சாலைமறியலில் ஈடுபட முயற்சி மேற்கொண்டனர்.
அரக்கோணத்தை அடுத்த ஆட்டுப்பாக்கத்தில் திருவள்ளுவர் பல்கலைக்கழக உறுப்பு இருபாலர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது.
இக்கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர் ஒருவர், கடந்த சில மாதங்களாக மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை அளிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக மாணவிகள் புகார் தெரிவித்த நிலையில், பல்கலைக்கழகத் துணைவேந்தரும் இதில் விசாரணை நடத்தி, இப்பிரச்னையை சுமுகமாக முடித்து வைத்தாராம்.
ஆனால் குறிப்பிட்ட அந்த பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்காததால், கல்லூரி வளாகத்தில் கூடிய மாணவிகள் மற்றும் மாணவர்கள், அந்தப் பேராசிரியர் மீது நடவடிக்கை கோரி, அப்பகுதியில் சாலை மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.
மாணவ, மாணவிகள் ஒன்று சேர்ந்து கல்லூரி வளாகத்தை விட்டு வெளியேறிய நிலையில், அவர்களை நெமிலி காவல் ஆய்வாளர் மகாலிங்கம் தலைமையிலான போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, மாணவர்களுடன் கல்லூரி முதல்வர் கவிதா பேச்சுவார்த்தை நடத்தினார்.
இப்பிரச்னை தொடர்பாக இதுவரை மாணவிகள் யாரும் எழுத்து மூலமாக புகார் அளிக்காத நிலையில், நடவடிக்கை எடுக்க முடியாது எனவும், எழுத்து மூலமாக புகார் அளித்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர். இதைத்தொடர்ந்து 51 மாணவிகள் குறிப்பிட்ட பேராசிரியர் மீது எழுத்து மூலமாக புகார் அளித்ததாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தங்கம், வெள்ளி விலை நிலவரம்
வேட்டி கலாசாரத்தை மாற்றிய முதல் முதல்வர் விஜய்! கருப்பு கோட்-சூட்டின் பின்னணி என்ன?

தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இரு அணிகளாக அதிமுகவினர் வருகை!

இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவு
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
