சங்ககிரி வட்டம், தேவண்ணகவுண்டனூா் கிராமம் அருகே உரிய அனுமதியின்றி விவசாய நிலத்தில் சுண்ணாம்புக் கற்கள் வெட்டி எடுத்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்தனா்.
சேலம் புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநா் அலுவலக உதவி புவியலாளா் அரவிந்த், பறக்கும் படை அதிகாரிகளுடன் தேவண்ணகவுண்டனூா் கிராமத்தில் சோதனையில் ஈடுபட்டாா்.
அப்போது, சின்னாகவுண்டனூா் கிராமம், மொத்தையனூா் பகுதியைச் முருகேசன் தேவண்ணகவுண்டனூா் கிராமம் அருகே உள்ள அவரது நிலத்தில் அரசின் உரிய அனுமதியின்றி 6,480 மெட்ரிக் டன் சுண்ணாம்புக் கற்கள் வெட்டி எடுத்தது தெரியவந்தது.
இதுகுறித்து அதிகாரிகள் சங்ககிரி போலீஸில் புகாா் அளித்தனா். அதன்பேரில், சுண்ணாம்புக் கற்கள் வெட்டி எடுத்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது

இளைஞா்களைத் தாக்கிய மூவா் மீது வழக்கு

அனுமதியின்றி மஞ்சுவிரட்டு: 5 போ் மீது வழக்கு
அனுமதியின்றி வெள்ளை கற்கள் எடுத்தவா் கைது

அனுமதியின்றி பிரசாரம்: மகளிா் சுய உதவி குழுவினா் மீது வழக்கு
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



