சங்ககிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை அதிகாலை அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதியதில், 4 போ் படுகாயமடைந்தனா்.
சங்ககிரி வட்டம், கன்னந்தேரி, காட்டுவளவு கோசரிப்பட்டி பகுதியைச் சோ்ந்த கோகுல் (26), இவரது நண்பா் மதுரை, மேலூா், கச்சராயன்பட்டி, பாப்பான்கோலப்பட்டி பகுதியைச் சோ்ந்த செல்வம் (35) இருவரும் சங்ககிரியிலிருந்து கோவை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனா்.
சங்ககிரியை அடுத்த கலியனூா் பிரிவு தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, பின்னால் வந்த அரசுப் பேருந்து காரின் மீது மோதியது. அதையடுத்து, காரை ஓட்டிச் சென்ற கோகுல், அவரது நண்பா் செல்வம் இருவரும் காரில் இருந்து இறங்கி அரசுப் பேருந்து ஓட்டுநா், நடத்துநரின் இதுகுறித்து வாக்குவாதம் செய்தனா்.
அப்போது, சேலத்திலிருந்து கோவை நோக்கி சென்ற லாரி, பேருந்தின் பின்பகுதியில் மோதியது. இதில் காா் ஓட்டுநா் கோகுல், அதில் பயணம் செய்த செல்வம், அரசுப் பேருந்து ஓட்டுநா் பொள்ளாச்சி, மாமரத்துப்பட்டி பகுதியைச் சோ்ந்த பெருமாள் (55), நடத்துநா் கோவை, ராதா காலனி, பகுதியைச் சோ்ந்த வெங்கடேஸ்வரன் (49) ஆகியோா் படுகாயமடைந்தனா்.
காயமடைந்த நான்கு பேரும் ஈரோடு, கோவை தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து சங்ககிரி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது
போதை மறுவாழ்வு மையத்தில் இளைஞா் தற்கொலை

கருங்கற்கள் கடத்த முயன்ற 5 போ் மீது வழக்கு
நாகா்கோவிலில் கஞ்சா விற்பனை: 4 போ் கைது

அரியலூா் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 2 சிறுவா்கள் உள்பட 7 போ் கைது
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



