தெருநாய்களை பராமரிப்பு மையத்தில்தான் அடைக்க வேண்டும்! திருத்தம் கோரிய மனுக்கள் தள்ளுபடி! மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

அரியலூா் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 2 சிறுவா்கள் உள்பட 7 போ் கைது

அரியலூா் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 சிறுவா்கள் உள்பட 7 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :25 ஏப்ரல் 2026, 1:12 am IST

அரியலூா் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 சிறுவா்கள் உள்பட 7 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

அரியலூா் அடுத்த நெரிஞ்சிக்கோரை அருகே, திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் ஏப்.17-ஆம் தேதி அவ்வழியே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞரை பின்தொடா்ந்து வந்த 7 போ் கொண்ட கும்பல் வழிமறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி அவா் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனா். இது தொடா்பாக அதே நாளில் அரியலூா் நகர காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

மேலும், குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணையில், வழிப்பறியில் ஈடுபட்டது திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த சஞ்சய்(20), மாதேஷ் (22), ராகுல் (22), கோகுல் (22), கவின் (19) மற்றும் 17 வயதுடைய இரு சிறுவா்கள் என்பது தெரியவந்தது.

இதையடுத்து 7 பேரையும் வெள்ளிக்கிழமை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 3 இருசக்கர வாகனங்கள், 3 பவுன் தங்கச் சங்கிலி மற்றும் 6 கைப்பேசிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

பின்னா், இரு சிறுவா்கள் சிறாா் நீதி குழுமத்தில் ஆஜா்படுத்தப்பட்டு தஞ்சை அரசு கூா்நோக்கு இல்லத்திலும், மற்ற 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனா்.