மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

ஆந்திர அரசு பெரும்பள்ளத்தில் கட்டியுள்ள தடுப்பு அணையை அகற்ற வேண்டும்: விவசாயிகள் சங்கம் கோரிக்கை

பாலாற்றோடு இணையும் துணை ஆறான பெரும்பள்ளம் பகுதியில் ஆந்திர அரசு உயர்த்திக் கட்டியுள்ள தடுப்பு அணையை தமிழக அரசு உடனடியாக

Updated On :3 செப்டம்பர் 2018, 7:20 pm

பாலாற்றோடு இணையும் துணை ஆறான பெரும்பள்ளம் பகுதியில் ஆந்திர அரசு உயர்த்திக் கட்டியுள்ள தடுப்பு அணையை தமிழக அரசு உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
வேலூர் மாவட்டதில் உள்ள நீர் ஆதாரங்களை பாதுகாக்க வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில், 18-ஆவது மாநாடு  ஜோலார்பேட்டையை அடுத்த கோடியூரில் திங்கள்கிழமை நடைபெற்றது.
மாவட்டச் செயலாளர்கள் நந்தி, சாமிக்கண்ணு, சின்னராஜி ஆகியோர் தலைமை வகித்தனர்.  மாவட்டச் செயலாளர் முல்லை வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர் துரைமாணிக்கம் சிறப்புரையாற்றினார்.
 மாநாட்டில், பாலாற்றோடு இணையும் துணை ஆறான பெரும்பள்ளம் பகுதியில் ஆந்திர அரசு உயர்த்திக் கட்டியுள்ள தடுப்பணையை உடனடியாக அகற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், தென்பெண்ணை ஆறு-கல்லாறு வழியாக பாலாற்றுடன் இணைக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். 
கிருஷ்ணகிரி அணையிலிருந்து வெலக்கல்நத்தம், செட்டேரி அணைக்கு இணைப்பு வழங்கி, நாட்டறம்பள்ளி மற்றும் திருப்பத்தூர் வட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளிலும் தண்ணீர் நிரப்ப வேண்டும். காட்டுப் பன்றிகள் மற்றும் வனவிலங்குகள் நாசப்படுத்தும் பயிர்களுக்கு முழு நஷ்ட ஈடு வழங்க வேண்டும். பன்றியை வன விலங்கு பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். 
பாலாறு மற்றும் நீர்நிலைகளில் தோல் கழிவுநீர், ரசாயனக் கழிவு நீர் கலப்பதை நிரந்தரமாகத் தடை செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், திரளான 
விவசாயிகள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.