/

உணவுப் பதப்படுத்துதல் வணிக வாய்ப்பு பயிற்சி முகாம்: விஐடியில் செப்.17-இல் தொடக்கம்

உணவு, வேளாண் உற்பத்தி பொருள்களை பதப்படுத்தி விற்பனை செய்வதற்கான வணிக வாய்ப்பு குறித்து பொறியியல், அறிவியல் பட்டதாரிகளுக்கு 

Updated On :3 செப்டம்பர் 2018, 7:17 pm

உணவு, வேளாண் உற்பத்தி பொருள்களை பதப்படுத்தி விற்பனை செய்வதற்கான வணிக வாய்ப்பு குறித்து பொறியியல், அறிவியல் பட்டதாரிகளுக்கு பயிற்சி அளிப்பதற்கான சிறப்பு முகாம் வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் செப்டம்பர் 17-ஆம் தேதி தொடங்கி 6 வார காலம் நடத்தப்பட உள்ளது.
இதுகுறித்து விஐடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
 விஐடியின் டிபிஐ எனப்படும் டெக்னாலஜி பிசினஸ் இன்குபேட்டர் மையம் மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையுடன் இணைந்து, ஆராய்ச்சி ஆய்வகங்கள் மூலம் புதிய உற்பத்திக்கான நவீன தொழில்நுட்பங்களை உருவாக்க ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ளவும், புதிய தொழில்முனைவோர்களை உருவாக்க பொறியியல், அறிவியல் பட்டதாரிகளுக்கு ஆராய்ச்சிப் பணிகள் மேற்கொள்ளத் தேவையான உதவிகள், ஆலோசனைகளை அளித்து வருகிறது.
தற்போது டிபிஐ மையம் உணவு, வேளாண் உற்பத்திப் பொருள்களை பதப்படுத்தி வணிக வாய்ப்புகளை உருவாக்குவது தொடர்பான பயிற்சி முகாமை நடத்துகிறது. ஆர்வமுள்ள 22 முதல் 45 வயது வரை உள்ள பொறியியல், அறிவியல் பட்டதாரிகள், பட்டயச் சான்று பெற்றவர்கள், வேளாண் உற்பத்தி வணிகத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் இந்த பயிற்சி முகாமில் சேரலாம். இந்த பயிற்சி முகாம் விஐடி டிபிஐ மையத்தில் செப்டம்பர் 17-ஆம் தேதி தொடங்கி, 6 வார காலம் நடத்தப்பட உள்ளது.
இப்பயிற்சி முகாமில் பங்கேற்பவர்களுக்கு தொழில்முனைவோராக உருவாக்குதல், சந்தை வசதி, நிதி வசதி, மனித வளம் ஆகியவற்றுக்கான தகவல்கள் அளிக்கப்பட உள்ளன. மேலும், உணவு பதப்படுத்துதல் தொழில்நுட்பம், தரக்கட்டுப்பாடு சான்று பெறுவதற்கான வழிமுறை, பேக்கேஜ் உள்ளிட்டவை குறித்து சில தொழில் நிறுவனங்களுக்கு நேரிடையாக சென்று பயிற்சி பெறவும் ஏற்பாடு செய்யப்ட்டுள்ளது. 
இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 11-ஆம் தேதி கடைசி நாளாகும்.
பயிற்சி முகாமில் சேர எச்சரிக்கை வைப்புக் கட்டணம் ரூ. 3 ஆயிரம் ஆகும். பயிற்சியை முழுமையாக முடிப்பவர்களுக்கு வைப்புக் கட்டணம் திருப்பி வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க, மேலும் விவரங்கள் அறிய 0416 - 2202301-03, 94433 11367 ஆகிய எண்களிலோ, ​b‌i​c‌o‌o‌r‌d‌i‌n​a‌t‌o‌r@‌v‌i‌t.​a​c.‌i‌n, ‌w‌w‌w.‌v‌i‌t‌t​b‌i.​c‌o‌m என்ற இணையதளங்கள் மூலமாகவோ அறிந்து கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.