சென்னையில் பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!புனேவில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பேசுபொருளாகும் ஜோதிமணி ட்வீட்!கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புமேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

சாலையை சீரமைக்கக் கோரி பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

ஆற்காட்டை அடுத்த திமிரியில் சேறும், சகதியுமாக உள்ள சாலையை சீரமைக்க வலியுறுத்தி, பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.

Updated On :3 செப்டம்பர் 2018, 7:17 pm

ஆற்காட்டை அடுத்த திமிரியில் சேறும், சகதியுமாக உள்ள சாலையை சீரமைக்க வலியுறுத்தி, பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.
திமிரி பேரூராட்சி 9-ஆவது வார்டுக்குள்பட்டது அருந்ததி பாளையம். இப்பகுதியில்  உள்ள மண் சாலையானது சேறும், சகதியுமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், அச்சாலையின் வழியாகச் செல்லும் பொதுமக்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் சாலையை சீரமைக்க வலியுறுத்தி, பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர், பேரூராட்சி அதிகாரிகளிடம்  மண் சாலையை சீரமைக்க வலியுறுத்தி  மனு கொடுத்தனர். 
மனுவைப் பெற்றுக்கொண்ட அதிகாரிகள் சாலையை சீரமைப்பதாக உறுதி அளித்ததின் பேரில், அனைவரும் கலைந்து சென்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.