உதவித்தொகையை வழங்காமல், மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது தவெக அரசு: கனிமொழிமுதல்வர் விஜய்யுடன் திருமாவளவன் சந்திப்பு!அமைச்சர் நிர்மலின் சர்ச்சைக்குரிய பேச்சு நீக்கம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியீட்டில் விதிமீறல்!மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

விவசாயிகள் தொழில் தொடங்க வழங்கிய இயந்திரங்கள்: ஆட்சியர் ஆய்வு

குறு, சிறு விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்பட்ட வேளாண் இயந்திரங்களை ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.

Updated On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

குறு, சிறு விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்பட்ட வேளாண் இயந்திரங்களை ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.
நாட்டறம்பள்ளியை அடுத்த கொத்தூர் உழவர் உற்பத்தியாளர் குழுவில் குறு, சிறு விவசாயிகள் 100-க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களுக்கு நிலையான வருமானம் கிடைக்கும் வகையில் தொழில் தொடங்க ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர். 
இதையடுத்து தமிழ்நாடு மானாவாரி தொகுப்பு திட்டம் பகுதி 1-இன் மூலம் குறு, சிறு விவசாயிகள் தொழில் தொடங்க ரூ. 10 லட்சம் மதிப்பிலான நாட்டு மரசெக்கு இயந்திம், பருப்பு உடைக்கும் இயந்திரம், குறு தானியங்கள் தோல் நீக்கும் இயந்திரம், மணிலா உடைக்கும் கருவி மற்றும் ஆயில் பேங்கிங் இயந்திரங்களை வேளாண்மை துறை மூலம் மானியத்தில் உழவர் உற்பத்தியாளர்கள் குழுவுக்கு  வழங்கப்பட்டுள்ளன. 
இந்நிலையில், பச்சூர் சென்றாயன் சாமி கோயிலின் பின்புறம் அமைந்துள்ள பருப்பு உடைக்கும் இயந்திர ஆலையை ஆட்சியர் எஸ்.ஏ. ராமன் புதன்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டார். 
அப்போது, நிலையான வருமானம் கிடைக்கும் வகையில் இப்பகுதியில் விளையும் துவரை, கடலை மற்றும் தானிய வகைபொருள்களை தயாரித்து  மதிப்பு கூட்டு விற்பனை செய்ய வேண்டும் என விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
இந்த ஆய்வின்போது, சார்-ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், வட்டாட்சியர் குமார், செயற்பொறியாளர் ஸ்ரீதர், வேளாண்மை உதவி இயக்குநர் சுருளிராஜ் மற்றும் வருவாய்த் துறையினர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.