குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

ரூ. 1.73 கோடி மதிப்பீட்டில்  ஏ.கஸ்பா- கங்காபுரம் சாலை விரிவாக்கம்

ஆம்பூர் ஏ.கஸ்பா-கங்காபுரம் சாலை இருவழிச் சாலையாக ரூ. 1.73 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

Published On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

ஆம்பூர் ஏ.கஸ்பா-கங்காபுரம் சாலை இருவழிச் சாலையாக ரூ. 1.73 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
ஆம்பூர் ஏ-கஸ்பாவில் இருந்து கங்காபுரம் வரையிலான சாலை மாநில நெடுஞ்சாலைத் துறையின் கட்டுபாட்டில் உள்ளது. அந்தச் சாலை சுகர்மில் சாலை என்றழைக்கப்பட்டது.  ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு விவசாயிகள் கரும்பு எடுத்து செல்வதற்காக அந்தச் சாலை போடப்பட்டதால் அவ்வாறு அழைக்கப்பட்டது. 
மாநில நெடுஞ்சாலையின் தடம் சி13 என்ற அந்தச் சாலை தற்போது 1,800 மீட்டர் தூரத்துக்கு ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 1.73 கோடி மதிப்பீட்டில் இருவழிச் சாலையாக விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. சாலை விரிவாக்கம் செய்யப்படுவதற்காக சாலையோரம் முள்செடிகள் வெட்டி தூய்மைபடுத்தும் பணி புதன்கிழமை தொடங்கியது. 
சாலை விரிவாக்கம் செய்யப்படுவதற்கு முன் அங்குள்ள சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளது. ஆக்கிரமிப்பு அகற்றிய பிறகு சாலை விரிவாக்கப் பணிகள் தொடர்ந்து நடைபெற 
உள்ளதாக மாநில நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.