
வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஆவின் பால் பொருள்கள் உற்பத்தி மையம் விரைவில் இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வேலூர், திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றிய (ஆவின்) அலுவலகம் வேலூர் சத்துவாச்சாரியில் செயல்பட்டு வருகிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்களை உறுப்பினர்களாகக் கொண்டு செயல்படும் இந்த ஆவின் பால் பொருள்கள் உற்பத்தி மையத்தில் அலுவலகத்தில் பால், பால் பொருள்கள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக இரு மாவட்டங்களிலும் ஆயிரக்கணக்கான முகவர்களும் உள்ளனர்.
வேலூர் சத்துவாச்சாரி ஆவின் பால், தயிர், ஐஸ்கிரீம் போன்ற பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. குடியிருப்புப் பகுதிகளில் அதிக அளவில் உள்ளதால் அங்கு மாசு ஏற்படுவதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்து ஆவின் அலுவலகத்தின் இடத்தை மாற்ற அறிவுறுத்தியது. அதன்பேரில், ஆவின் பால் பொருள்கள் உற்பத்தி மையத்தை இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், காட்பாடி அருகே உள்ள கிறிஸ்டியான்பேட்டை டெல் தொழிற்சாலைக்குச் சொந்தமான இடத்தை ஆவினுக்கு வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அங்கு ஆவின் உற்பத்தி மையம் விரைவில் இடமாற்றம் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




