
இந்தியாவுக்கு எதிரான டி20: 7 வேகப்பந்து வீச்சாளர்களுடன் நியூசிலாந்து அணி அறிவிப்பு!
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளதைப் பற்றி...
நியூசிலாந்து அணி.
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 5 டி20, 2 டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவிருக்கிறது. இந்தத் தொடர் வருகிற அக். 22 ஆம் தேதி தொடங்கும் நிலையில் டிச. 1 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த நிலையில், அக்டோபரில் தொடங்கும் டி20 தொடருக்கான நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. மிட்செல் சாண்டனர் 7 வேகப்பந்து வீச்சாளர்களுடன் மொத்தமாக 16 பேர் கொண்ட அணியை நியூசிலாந்து அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
நிகழாண்டு நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பையின் இறுதிப்போட்டியில் இந்தியாவிடம் தோல்வியைத் தழுவிய நியூசிலாந்து அணியில் இடம் பிடித்திருந்த சுழற்பந்து ஆல்-ரவுண்டர் மைக்கேல் பிரேஸ்வெல் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் மில்னே உள்பட 13 வீரர்கள் இந்தத் தொடரில் இடம்பெற்றுள்ளனர்.
தொடக்க ஆட்டக்காரர் ரச்சின் ரவீந்திரா காயம் காரணமாக விலகியதால், அவர் அணியில் இடம்பெறவில்லை. அவருக்கு 6 வார கால ஓய்வு தேவைப்படுவதால், அவர் ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க்கில் நவ. 4 ஆம் தேதி தொடங்கும் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் மீண்டும் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிரடி பட்டாளங்கள் நிரம்பிய இந்திய அணியை வலிமைமிக்க வேகப்பந்து வீச்சாளர்களை உள்ளடக்கிய நியூசிலாந்து அணி எதிர்கொள்வதால் இந்தத் தொடருக்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. இந்தத் தொடருக்கு இன்னும் ஒரு மாதம் இருக்கும் நிலையில், வரலாற்றில் இல்லாத வகையில் 76,000 டிக்கெட்டுகள் முன்னதாகவே விற்றுத்தீர்ந்துள்ளன.
நியூசிலாந்து அணி விவரம்: ஃபின் ஆலன், மேட் ஹென்றி, கிளென் பிலிப்ஸ், சாக் ஃபௌல்க்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், ஆடம் மில்னே, மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), பெவோன் ஜேக்கப்ஸ், ஜேக்கப் டஃபி, டேரில் மிட்செல், டிம் செய்ஃபர்ட், மார்க் சாப்மேன், கைல் ஜேமிசன், கான்வே, நாதன் ஸ்மித், ஃபெர்குசன்.
Summary
New Zealand have announced a 16-member squad for the upcoming five-match T20I series against India, with a seven-strong pace attack headlining the first BLACKCAPS squad of the home summer.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






