
நாட்டறம்பள்ளி அருகே செல்லிடப்பேசி கோபுரத்தில் உள்ள பேட்டரிகளை திருட முயன்ற 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
நாட்டம்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சுண்ணாம்புகுட்டை பகுதியில் தனியார் செல்லிடப்பேசி கோபுரம் உள்ளது.
திங்கள்கிழமை நள்ளிரவு மர்ம நபர்கள் செல்லிடப்பேசி கோபுரத்தில் இருந்த பேட்டரிகளை திருட முயன்றனர். அப்போது, எச்சரிக்கை மணி ஒலித்ததால், மர்ம நபர்கள் சாலையோரம் நின்றிருந்த மினி லாரியில் தப்பிச் சென்றனர். இதுகுறித்து உடனடியாக நாட்டறம்பள்ளி போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் பச்சூர் டோல்கட் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், அவ்வழியாக வந்த மினி லாரியை நிறுத்தி விசாரித்தனர். அதிலிருந்த 3 பேரும் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால், சந்தேகமடைந்த போலீஸார் லாரியை பறிமுதல் செய்து, 3 பேரையும் நாட்டறம்பள்ளி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
அதில், கிருஷ்ணகிரி கரடிகுப்பம் பகுதியைச் சேர்ந்த முரளி (25), வேலு (25) வெங்கட்டாசலம் (23) என்பதும், இவர்கள் 3 பேரும் மினி லாரியில் வந்து நாட்டறம்பள்ளி அருகே செல்லிடப்பேசி கோபுரத்தில் இருந்த பேட்டரிகளை திருட முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, 3 பேரையும் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





