ஜோலார்பேட்டை அருகே வியாழக்கிழமை பைக் மீது ஆட்டோ மோதிய விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 5 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வராததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நாட்டறம்பள்ளியை அடுத்த பச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் அனுமுத்தன் (40). தொழிலாளியான இவர் வியாழக்கிழமை தனது பைக்கில் மனைவி பபிதா மற்றும் 2 குழந்தைகளுடன் திருப்பத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
ஜோலார்பேட்டையை அடுத்த தாமலேரிமுத்தூர் ரயில்வே கேட் அருகே வந்தபோது, நாட்டறம்பள்ளி நோக்கி வந்த சரக்கு ஆட்டோ பைக் மீது மோதியது.
இதில், அனுமுத்தன், அவரது மனைவி, 2 குழந்தைகள், ஆட்டோ ஓட்டுநர் என 5 பேர் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து அப்பகுதி மக்கள் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், ஒரு மணி நேரம் ஆகியும் ஆம்புலன்ஸ் வாகனம் வராததால், ஆத்தரமடைந்த அப்பகுதி மக்கள் நாட்டறம்பள்ளி-திருப்பத்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த ஜோலார்பேட்டை போலீஸார் அங்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், காயமடைந்த 5 பேரையும் தனியார் வாகனத்தில் ஏற்றி, திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில், அனுமுத்தன், பபிதா, 2 குழந்தைகள் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திய ஆட்டோ ஓட்டுநரான தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஷபீரிடம் (45) விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







