திருப்பத்தூர் அருகே இருவேறு இடங்களில் மின்சாரம் பாய்ந்து இரு சிறுவர்கள் இறந்தனர்.
ஜோலார்பேட்டை அருகே ரெட்டியூர் காலனிப் பகுதியைச் சேர்ந்த இளம்பருதியின் மகன் அகத்தியன் (13). இவர், ஜோலார்பேட்டை அருகே சின்னகம்பியம்பட்டில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் வியாழக்கிழமை விநாயகர் சதுர்த்தியையொட்டி, அப்பகுதியில் விநாயகர் சிலை அமைத்து, சீரியல் பல்புகள் அமைக்கப்பட்டிருந்தன. மாலை ஜோலார்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது.
இதனால், அங்கு சீரியல் பல்பு படர்ந்திருந்த கம்பத்தில் மின்சாரம் சென்றுகொண்டிருந்ததாம். இதை அறியாத அகத்தியன் அந்தக் கம்பத்தைப் பிடித்தபோது, மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து அருகே இருந்தவர்கள் அகத்தியனை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அகத்தியன் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்: திருப்பத்தூரை அடுத்த குரிசிலாப்பட்டு அருகே உள்ள பெருமாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வேலுவின் மகன் பிரதீப்குமார் (8). இவர், அப்பகுதியில் உள்ள பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்தார். வியாழக்கிழமை மாலை அப்பகுதியில் மழை பெய்துள்ளது. அப்போது, அங்கு அமைக்கப்பட்டிருந்த மின்சார விளக்கை பிரதீப்குமார் பிடித்தபோது மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே இறந்தார்.
தகவலறிந்த குரிசிலாப்பட்டு போலீஸார் அங்கு சென்று பிரதீப்குமாரின் சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




