முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற தன்வந்திரி பீடத்தில் சிறப்பு ஹோமங்கள்

குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டியும், பொதுத் தேர்வு காலகட்டத்தில் மாணவ, மாணவியருக்கு

Updated On :25 பிப்ரவரி 2019, 7:10 am IST

குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டியும், பொதுத் தேர்வு காலகட்டத்தில் மாணவ, மாணவியருக்கு ஏற்படும் தேர்வு பயம் நீங்கவும், ஞாபக மறதியைப் போக்கவும் வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றன.
பீடத்தின் ஸ்தாபகர் முரளிதர சுவாமிகளின் ஆலோசனைப்படி ஞாயிற்றுக்கிழமை ஸ்வாதி நட்சத்திரம், பஞ்சமி திதியை முன்னிட்டு காலை 10 மணி முதல் 12 மணி வரை நோய் தீர்க்கும் கடவுளான தன்வந்திரி பகவானை வேண்டி சிறப்பு தன்வந்திரி ஹோமமும், சரஸ்வதி ஹோமமும் நடத்தப்பட்டன. மேலும் வாணி சரஸ்வதி தேவிக்கு தேன் அபிஷேகமும், தாமரைப் பூக்களால் சிறப்பு அர்ச்சனையும் நடைபெற்றன. 
இதில் பங்கேற்ற மாணவ மாணவியர்களுக்கு முரளிதர சுவாமிகள் ஆசியுடன் குங்குமம், அபிஷேகத் தேன், நோட்டுப் புத்தகங்கள், எழுது பொருள்கள், ஏலக்காய் போன்ற விசேஷ பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.