குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

தமிழ்நாட்டை ஆள்வது எங்கள் இலக்கு அல்ல

தமிழ்நாட்டை ஆள்வது எங்களின் இலக்கு அல்ல என்று முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கூறினார். 

Updated On :25 பிப்ரவரி 2019, 7:12 am IST

தமிழ்நாட்டை ஆள்வது எங்களின் இலக்கு அல்ல என்று முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கூறினார். 
ஆற்காட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருமண விழாவில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியது:
பாலாற்றில்  தண்ணீர் மட்டுமல்ல; தற்போது மணலும் இல்லை. தோல் கழிவுகளால் பாலாறு மாசுபட்டுள்ளது. இதற்காக  பல போராட்டங்களை பாமக நடத்தி வருகிறது. கடந்த 1996-ஆம் ஆண்டில் "பாலாற்றைக் காப்போம்' என்று வாணியம்பாடியில் இருந்து  வாலாஜா வரை சைக்கிள் பேரணி நடத்தினோம். நாம்  நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டும். நீர் ஆதாரத்தை பெருக்க வேண்டும். அதற்கு மக்கள்  விழிப்போடு இருக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் மழை போதுமான அளவு பெய்கிறது. ஆனால் மழைநீரைத் தேக்கி வைக்கக் கூடிய கண்மாய்கள், ஏரிகள், குளங்கள் ஆகியவை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அதிக நகரங்களைக் கொண்ட மாநிலம் என்று கூறுகிறார்கள். ஆனால் விவசாயமும் இல்லை; விவசாயிகளுக்கு வாழ்வாதாரமும் இல்லை.
தமிழ்நாட்டில் நீடித்த வளர்ச்சி வேண்டும். அதுதான் உண்மையான வளர்ச்சியாகும். தற்போது ஆற்காட்டில் கிச்சிலி அரிசி இல்லை. அது முடிந்து விட்டது. பாரம்பரியத்தை இழந்துள்ளோம். நாட்டில் நீர்வளம், நிலவளம், விவசாயம் பாதுகாக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டின் வளர்ச்சிதான் பாமக-வின் நோக்கம். எங்களுடைய இலக்கு தமிழ்நாட்டை ஆள்வது கிடையாது. தமிழகத்தை முன்னேற்றுவதுதான் இலக்காகும். பாமக ஆட்சிக்கு வந்தால் சீக்கிரமாக முன்னேற்றலாம். பல திட்டங்களைக் கொண்டுவருவோம். தொடர்ந்து ஆதரவு தாருங்கள், மாற்றங்களை உருவாக்குவோம் என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.