குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

அப்துல் கலாம் நினைவாக ஏ.பி.ஜே. வடிவில் நின்று மாணவர்கள் சாதனை

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவைப் போற்றும் வகையில், ஆற்காட்டை அடுத்த

Updated On :23 ஜனவரி 2019, 8:43 am IST

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவைப் போற்றும் வகையில், ஆற்காட்டை அடுத்த விளாப்பாக்கம்  மகாலட்சுமி செவிலியர் கல்லூரி வளாகத்தில்  ஆயிரம் மாணவ, மாணவியர் ஏ.பி.ஜே. என்ற ஆங்கில எழுத்துக்களின் வடிவில் செவ்வாய்க்கிழமை நின்றதோடு, மரக்கன்றுகளையும் நட்டு சாதனை படைத்தனர்.
வேலூர் மாவட்ட அப்துல் கலாம் அறக்கட்டளை, ஆற்காடு லட்சுமி அம்மாள் கல்வி அறக்கட்டளை, யுனிவர்சல் அச்சீவர்ஸ் ரெக்கார்ட் மற்றும் கலாம்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகியவை இணைந்து  குடியரசு தின விழாவை முன்னிட்டு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு மரியாதை செலுத்த முடிவு செய்தன. 
அதன்படி, ஆற்காட்டை அடுத்த விளாப்பாக்கத்தில் உள்ள மகாலட்சுமி செவிலியர் கல்லூரி, மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, லட்சுமி லோகநாதன் பள்ளி மாணவர்கள் ஆயிரம் பேர் இணைந்து ஏ.பி.ஜே. என்ற ஆங்கில எழுத்துகளின் வடிவில், கைகளில் மரக்கன்றுகளை ஏந்தி நின்றனர். பின்னர் அந்த மரக்கன்றுகளை அவர்கள் நட்டு, சாதனைப் புத்தகத்தில்  இடம்பெற்றனர்.
இந்த நிகழ்ச்சிக்கு லட்சுமி அம்மாள் கல்வி அறக்கட்டளையின் தலைவர் பாலாஜி லோகநாதன் தலைமை வகித்தார். அப்துல் கலாம் அறக்கட்டளையின் கெளரவத் தலைவர் ஜெ.லட்சுமணன், அண்ணாமலையார் அறக்கட்டளையின் கு.சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, கர்நாடக மாநிலம், தும்கூர் சித்தகங்கா மடாதிபதி சிவக்குமார சுவாமியின் மறைவுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.