வாணியம்பாடி அருகே செவ்வாய்க்கிழமை நடந்த எருது விடும் விழாவின்போது, குறைந்த நேரத்தில் எல்லையைக் கடந்து முதல் பரிசைத் தட்டிச் சென்ற காளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தது. இச்சம்பவம் எருதுவிடும் திருவிழாவுக்கு வந்திருந்தோரை சோகத்தில் ஆழ்த்தியது.
வாணியம்பாடியை அடுத்த நிம்மியம்பட்டு கிராமத்தில் 153-ஆம் ஆண்டு மயில் திருவிழாவை முன்னிட்டு எருதுவிடும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. காலை 10 முதல் 3 மணி வரை இப்போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் 100-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. இப்போட்டியில் குறைந்த நேரத்தில் இலக்கைக் கடந்த காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
முதல்பரிசை வள்ளிப்பட்டைச் சேர்ந்த வாயுபுத்திரன் என்ற எருது மோட்டார் சைக்கிள் பரிசை தட்டிச் சென்றது. 2-ஆவது பரிசை வளையாம்பட்டு பகுதியைச் சேர்ந்த பொல்லாதவன் என்ற காளையும், 3-ஆவது வெள்ளக்குட்டை பகுதியைச் சேர்ந்த பாபு என்பவரின் காளையும் பெற்றன. அதேபோல் வேகமாக ஓடிய 25 காளைகளுக்கு விழாக் குழுவினர் பரிசுகள் வழங்கினர்.
கிணற்றில் தவறி விழுந்து சாவு: இந்நிலையில் முதல் பரிசு பெற்ற காளையான வாயுபுத்திரன் 2-ஆவது சுற்று இறுதியில் குறிப்பிட்ட எல்லையைக் குறைந்த நேரத்தில் கடந்து சென்றது.
அதைத் தொடர்ந்து அக்காளை நிற்காமல் தொடர்ந்து வேகமாக ஓடியபோது, சாலையோரக் கிணற்றில் தவறி விழுந்தது. இக்காளை முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் சம்பத்குமாருடையது ஆகும்.
இதைக் கண்ட அப்பகுதி இளைஞர்கள் காளையை மீட்க போராடினர். அத்துடன் தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினரும் காளையை மீட்க முற்பட்டனர். ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு மீட்கப்பட்ட காளை சிகிச்சைக்குக் கொண்டுச் செல்லும் வழியில் உயிரிழந்தது. இதை அறிந்த எருதுவிடும் விழாக் குழுவினர், அங்கு திரண்டிருந்த பார்வையாளர்கள் அதிர்ச்சியும், சோகமும் அடைந்தனர்.
இதையடுத்து, உயிரிழந்த காளையின் உடல் வள்ளிப்பட்டில் உள்ள முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் சம்பத்குமார் இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. காளையின் உடலுக்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். திரளான பொதுமக்களும், மாவட்ட எருதுவிடும் விழா சங்க நிர்வாகிகளும் காளைக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அதைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அந்த காளையின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
உயிரிழந்த காளை தொடர்ந்து சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த எருதுவிடும் திருவிழாக்களில் பங்கேற்று தொடர்ந்து முதல் பரிசை தட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நடிகர் அல்ல... முதல்வர் விஜய்! திமுக தலைவர்களின் பதிவுகளுக்கு கடும் விமர்சனங்கள்!

கருப்பு டிரைலர்!

முதல்வா் விஜய்க்கு தருமபுரம் ஆதீனம் வாழ்த்து!

பேங்க் ஆஃப் இந்தியா 4வது காலாண்டு லாபம் 19% உயர்வு!
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
