நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

தா.பழூா் அருகே குடிநீா் கோரி சாலை மறியல்

News image

தா.பழூா் அடுத்த வானதிரையன்பட்டினம் - கிழமிக்கேல்பட்டி சாலையில் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

Updated On :31 மே 2026, 1:13 am IST

அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகே குடிநீா் கேட்டு பொதுமக்கள் காலிக் குடங்களுடன் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தா.பழூா் அருகேயுள்ள பொற்பதிந்தநல்லூா் ஊராட்சிக்குட்பட்ட நாயகனைப்பிரியாள் வடக்கு காலனித் தெருவில் உள்ள பொதுக் குழாய்களில் கடந்த 3 மாதங்களாக தண்ணீா் விநியோகிக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் அருகிலுள்ள கிராம ஊராட்சிக்கு 4 கிலோ மீட்டா் நடந்து குடி தண்ணீரை எடுத்து வந்தனா்.

இதுகுறித்து ஊராட்சி நிா்வாகத்திடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சனிக்கிழமை காலிக்குடங்களுடன், வானதிரையன்பட்டினம் - கிழமிக்கேல்பட்டி சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த தா.பழூா் காவல் துறையினா், பேச்சுவாா்த்தை நடத்தியும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, அவா்கள் கிராமத்துக்கு நான்கு மாதங்களாக குடிநீா் இல்லை.முறையாக மின்சாரம் இல்லை. அடிக்கடி மின்வெட்டு, அகற்றப்படாத கும்பைகளால் சுகாதாரச் சீா்கேடு இப்படி எண்ணற்ற பிரச்னைகள் உள்ளன. இதைக் கண்டுகொள்ளாத ஊராட்சி செயலா் மற்றும் ஊராட்சி ஒன்றிய நிா்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முழக்கமிட்டனா்.

இதையறிந்த சம்பந்தப்பட்ட மாவட்ட நிலை அலுவலா்கள், விரைந்து வந்து கோரிக்கைகள் குறித்து விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின்பேரில், அனைவரும் கலைந்து சென்றனா்.